- கவிதா அறிவழகன்
நிசப்தம் ஆளும் நிலவின் மடியில்,
இரவின் ஓசையும்,
உயிரின் ஓசையும்,
ஒன்றோடு ஒன்று
ஐக்கியமாகும் வேளையில்...
எங்கிருந்தோ வந்த நட்சத்திரக் கூட்டங்கள்,
மௌனமாக உயிருடன் கலந்து பேசத் தொடங்கின.
இமைமூடி நினைவுகள் ஆழ்ந்த வேளையில்,
இதயத்துடிப்பின் ராகமும்,
நட்சத்திரங்களின் ரகசியக் காதலும்
அழகாகச் சங்கமிக்க
ஆரம்பித்தன.

காற்றோ தன் பங்கிற்கு இணையாக,
மரங்களின் ஊடே
பாட்டிசைக்கத் தொடங்கின!
இரவின் வண்டுகளோ,
காற்றின் இசைக்கு ஏற்பத் தாளங்கள் போட்டன.
இத்தகைய இரவின் பேரமைதிக் கச்சேரியில்,
விடை தெரியா கேள்விகள் அனைத்தும்
நட்சத்திரக் கூட்டங்களின் ஒளியினில்
சுவடுகளின்றி கரைந்து போயின!
என் உயிரினுள் என்றும் கிடைக்காத
இந்த ஏகாந்த ஓசையில்
இன்று...
ததும்பி நிரம்பி வழிந்தது!
(Kavitha Arivalagan, Creative writers, Dharmapuri)
கருவறைப் பூக்கள்
எதிர்கால தலைமுறைக்கு பசுமை நிறைந்த உலகை விட்டு செல்வோம்!
World Food day: மனிதா, பிறருக்கு உணவளித்துப் பார்!
பேசா ஓவியம்.. ஒரு நிமிடக் கதை (37)
யானை சவாரி!
எனக்காகவும் கொஞ்சம் வாழ்கிறேன் - ரம்யாவின் கவிதைத் தோட்டம் – (2)
டெல்லிக்கு ராஜான்னாலும் ஆச்சி சொல்லைத் தட்டாதே !
எட்டு எட்டா மனித வாழ்வை பிரிச்சுக்கோ - ஏன் பிரிச்சு வச்சிருக்காங்க தெரியுமா?
தென்தமிழ் தலையங்கம்: மழையை ரசிக்க மறந்த மனிதன் - ஏன் இவ்வளவு பயம்??
{{comments.comment}}