சென்னை: வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி மே 27 ஆம் தேதி உருவாக கூடும் என ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், அதன்படியே தற்போது வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மத்திய அரபிக்கடல் பகுதிகளில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் கன மழை பெய்தது. மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கிழக்கு திசை நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே கரையை கடந்தது. இதற்கிடையே கடந்த 24ஆம் தேதி தமிழ்நாடு, கேரளா மற்றும் ஆந்திராவில் தென்மேற்கு பருவமழை துவங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. இந்த தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கி பின்னர் ஜூலை முதல் வாரத்தில் நாடு முழுவதும் பரவி, நாட்டின் தென்மேற்கு பருவமழை காலகட்டத்தில் 80 சதவீதம் மழை கிடைக்கும் எனவும் தெரிவித்தது.

அதன்படி, தற்போது தமிழ்நாடு முழுவதும் பரவலாக கனமழை முதல் மிதமான மழை வரை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள், நீலகிரி, கோவை, மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கி வருகிறது. தொடர்ந்து நீலகிரி, கோவை மாவட்டங்களில் மிக கனமழை வரையில் பெய்யக்கூடும் என்பதால், அப்பகுதிகளில் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாடு முழுவதும் வெயிலே இல்லாமல் வானம் மேகமூட்டத்துடன் இதமான காற்று வீசி வருவதால், குளுமையான சூழல் நிலவுகிறது.
இந்த நிலையில் மத்திய அரபிக் கடலைத் தொடர்ந்து, வங்க கடலிலும் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தற்போது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.இது மேலும் வலுவடைய கூடும்.இதன் காரணமாக தமிழ்நாட்டில்
இன்று முதல் மே 30ம் தேதி வரை தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக் கூடும் என்பதால் ஆரஞ்ச் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் கடலோர கர்நாடகா, தெற்கு உள் கர்நாடகா, கோவா, மத்திய மகாராஷ்டிரா உள்ளிட்ட பகுதிகளுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுத்துள்ளது.
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}