ஒப்பற்ற ஆசிரியர்.. போதனையே பிரதானம்.. கேசிஆர் தமிழ்நாட்டு பாடநூல் உறுப்பினரான கதை!

Jun 02, 2026,10:31 AM IST

- பாரதிராஜன்


காஞ்சீபுத்திறகும் செங்கல்பட்டுக்கும் இடையேயான ஒரு டவுன் தான் வாலாஜாபாத் என்ற டவுன். இந்த இடம் புது சீவரம் என்ற பெயராலும் அழைக்கப்பட்டது. 


இந்த டவுனில் மாசிலாமணி முதலியார் என்பவரால் 04/09/1916 வா.தி.மாசிலாமணி முதலியார் பள்ளி ஆரம்பிக்கப்பட்டது. முதலில் எட்டாம் வகுப்பு வரை மட்டுமே இருந்தது. பள்ளியில் மாணவர்கள்தங்கி படிக்க வசதியாக ஹாஸ்டல் ஏற்படுத்தப பட்டது. 


இப்பள்ளியில் கே.சி.இராஜகோபாலாச்சாரி என்பவர் தலைமை ஆசிரியராகப்பணிபுரிந்துவந்தார். இந்த பள்ளிக்கு சுதந்திரப் போராட்ட வீரர்கள், மூதறிஞர் ராஜாஜி அவர்கள், என்.டி.சுந்தரவடிவேலு போன்றவர்கள் வந்திருக்கிறார்கள்.  என்.டி சுந்தர வடிவேலு அவர்கள் சென்னையிலுள்ள பாடநூல் துறை இயக்குநராக பதவி வகித்தவர். 


கே.சி.ஆர்அவர்கள் அந்த காலத்து பி.ஏ.எல்.டி படித்தவர். எல்.டி படிப்பை ஒரத்தநாட்டில் படித்தவர். ஆங்கிலமும், கணிதமும் இவரின் விருப்பான பாடங்கள். கணிதவழி முறை சொன்னால் அவரின் வழியே கணிதம் விடை சரியாக வரும். முன்னாள் குடியரசுதலைவர் டாக்டர்.சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் அவர்களுடைய பிறந்த தினமான  செப் 5 ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது அனைவரும் அறிந்ததே. அதேநாளில் பள்ளிக்கூட ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டு வருகிறது.




திரு.கே.சி.ஆர்அவர்களுடையபெயரும் தேர்வு செய்யபபட்டு அரசால் தேர்வு செய்ய ப்படவில்லை. இதனால் கேசிஆர் அவர்கள் வருத்தப்படவில்லை. ஆனால் என்.டி.சுந்தர வடிவேலு அவர்கள் பாடநூல் திட்டத்தில் பதவி கொடுத்து கே.சி.ஆர் பணியில் இருந்து ஒய்வுபெறும் வரை  ஆங்கிலம், கணிதம் அவர்தேர்வு செய்யும் புத்தகமே எல்லா பள்ளிகளிலும் படிக்க ஏறபாடு செய்தார்.


இதன்மூலமாக வாலாஜாபாத்திலிருந்து சென்னையிலுள்ள டி.ஜி.கோபால் பிள்ளை கம்பெனி, பி.ஜி.பால் கம்பெனி, லோட்டஸ் பப்ளிகேஷன் கம்பெனிக்கு செல்லும் வாய்ப்பு ஏற்பட்டது. கே.சி.ஆரின் பேரனான நான் அவருடன் செல்லும் வாய்ப்பு ஏற்பட்டது. கே.சி.ஆர் அவர்கள் புத்தகக் கம்பெனியில் டீ, காபி கூட குடிப்பதை தவிர்த்தார். 


தனது பணிகளை வெற்றிகரமாக முடித்த கே.சி.ஆர் பணியில் இருந்து ஒய்வுபெற்றார். என்.டி.எஸ். அவர்கள் சென்னை பல்கலைக்கழக துணைவேந்தராக பதவி ஏற்றார். 


என் தாத்தா சென்னைக்கு வரும்போது என்.டி.எஸ் அவர்களைப் பார்த்து விட்டு வருவார். கூட நானும் போய் இருக்கிறேன். 18/07/1971 கே.சி.ஆர். அவர்கள் காலமானார். அந்த செய்தியை 20/07/1971திணமணி நாளிதழ் மூலமாக அறிந்தபின் நேராக எங்களுடைய வீட்டுக்கு வந்து என் பாட்டிக்கு ஆறுதல் சொல்லி விட்டு சென்றார். 


(எழுத்தாளர் பாரதிராஜனின் இயற்பெயர் ரங்கராஜன் , பாரதியார் பாடல்கள் மேல் உள்ள காதலால் பாரதிராஜன் என்கிற புனைப்பெயரில் கதை கட்டுரை மற்றும் கவிதை எழுதி வருகிறார். சென்னை அம்பத்தூரில் வசித்து வருகிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!

news

கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்