- தெ.நாராயண லெட்சுமி, B.E
வாழ்க்கையை தேடி சொந்த ஊரை விட்டு தூரம் வந்து வாழும் புலம்பெயர் வாழ்க்கையில், சில நேரங்களில் சொந்தங்களைவிட நெருக்கமாக மாறிவிடுவது நட்புதான். அப்படிப்பட்ட மனதை நெகிழச் செய்யும் ஒரு அழகான நட்பு தான் எங்கள் நட்பு.
கிரிக்கெட் மைதானத்தில் சும்மா ஆரம்பித்த ஒரு அறிமுகம், காலப்போக்கில் ஆழமான நட்பாக மாறி இன்று ஒரே நிறுவனத்தில் தோளோடு தோள் நின்று வேலை செய்யும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது சதீஷ் மற்றும் தினேஷ் ஆகியோரின் உறவு.
வேலை, வாழ்க்கை, சந்தோஷம், கவலை – எதுவாக இருந்தாலும் ஒருவருக்கொருவர் துணையாக நிற்கும் இந்த நட்பு கிடைத்தது எங்கள் வாழ்க்கையில் ஒரு பெரிய வரமாகவே உணர்கிறோம்.
நெகிழ்ச்சியூட்டிய சர்ப்ரைஸ்

சதீஷ் birthday க்காக அவரது நெருங்கிய நண்பர் தினேஷ் மற்றும் அவரது மனைவி பிரியா இணைந்து ஒரு இனிய சர்ப்ரைஸ் செய்தனர். சதீஷ்க்கு அழகான புத்தாடை கொடுத்து, இனிப்பான கேக்குடன் பிறந்தநாளை சந்தோஷமாகக் கொண்டாடினோம்.
குடும்பங்கள் போல எல்லாம் சேர்ந்து, சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த அந்த தருணங்களில் கேக் வெட்டி கொண்டாடினோம் , அந்த இனிய நினைவுகளை புகைப்படங்களாகவும் பதிவு செய்து வைத்தோம் . பின்னர் அனைவரும் சேர்ந்து பேசி கொண்டு cake உண்டு அந்த மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டோம்.
பெண்களின் மனமார்ந்த தோழமை
ஆண்களின் நட்பு எப்படி உறுதியாக இருக்கிறதோ, அதுபோலவே எங்களது (லக்ஷ்மி மற்றும் பிரியா )ஆகியோரின் நட்பும் மிகவும் அழகாக மலர்ந்துள்ளது.
நேரம் கிடைக்காத நாள்களிலும் கூட, ஒரு சிறிய மெசேஜ் மூலமாகவாவது எங்கள் அன்பையும் நட்பையும் பகிர்ந்து கொள்வோம்.
அடுத்த தலைமுறையின் இனிய தொடர்
இந்த நட்பின் இனிய தொடர்ச்சியாக, இவர்களது செல்லப் பிள்ளைகளான வேதா மற்றும் சிவன்யா, சாய் மற்றும் குமரன் ஆகியோரும் சிறு வயதிலிருந்தே நல்ல நண்பர்களாக வளர்ந்து வருவது இந்த உறவின் அழகை இன்னும் அதிகரிக்கிறது.
வேலைப்பளு நிறைந்த வாழ்க்கையில், சொந்த ஊரை நினைத்து வாழும் புலம்பெயர் மக்களுக்கு இப்படிப்பட்ட உண்மையான நட்புகள் தான் ஒரு பெரிய ஆறுதலாக இருக்கிறது.
“உற்றார் யாரோ? நண்பர்களே!” என்ற சொல்லுக்கு அர்த்தம் கொடுக்கும் இந்த இரண்டு குடும்பங்களின் நட்பு, காலம் கடந்தும் என்றும் இனிதே தொடர வேண்டும் என்று அனைவரும் மனமார வாழ்த்த வேண்டுகிறேன்.
(தெ. நாராயணலட்சுமி, ஐக்கிய அரபு அமீரகத்தின் ராஸ் அல் கைமாவில் வசித்து வருகிறார்)
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
அஜா ஏகாதசி.. மகா விஷ்ணுவையும்.. மகாலட்சுமி தாயாரையும் நினைத்து விரதம் இருப்போம்!
தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை
உன்னையே கதியென்று நினைக்கிறேனடி கண்ணம்மா!
Motivational Monday: மாறுபடும் மதிப்புகளும் மதிப்பீடுகளும்.. சிறுகதை!
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
{{comments.comment}}