- எழுத்தாளர் சைவ சித்தாந்தச்சுடர் சிவ. பா. சுமதி
குறையின்றிப் பிறந்தோமே மனிதா!
நரை தோன்றிப் பிறந்த மண்ணுக்கே
இரையாவது தான் வாழ்வென்ற நினைவா?
வாசலுக்கு வரும் ஈசலைப்பார் மனிதா
மெல்லிய சிறகடித்துப் பறப்பதிலே
அடடா அது கொள்ளும் மகிழ்ச்சிக்குத் தான் அளவென்பதுண்டா?
தனது ஆயுள் ஒரு நாள் தான் என்பது அறிந்தும்
தன் மனதில் அது சிறிதேனும் கலக்கம் கொள்வதுண்டா? சொல்.,
காலையில் மலர்ந்தோம் மாலையிலே உதிர்ந்திடுவோம் என்னடா இது வாழ்க்கை எனச் சாவதை நினைத்து எந்த மலரேனும் சோர்வு கொள்வதுண்டா? சொல்.

இன்று பிறந்தோம் மீண்டும் என்று எங்கு பிறப்போமோ இல்லையோ!
இயன்றவரை ஒன்றேனும் நன்று செய்வோமே என்றே
ஒரு நாள் வாழ்வது தான் ஆனாலும் திருநாள் போல் மலர்கள் மகிழ்விப்பதில்லையா?
நினைத்துப்பார் மனிதா
உனது வாழ்வு அப்படியொன்றும் குறுகியதில்லையே!
பின் ஏன் இப்படி அறிவைக் குறுக்கி வைக்கிறாய்?
மாற்றுத் திறனாளிகளும் கூடத் தம் வேதனை எல்லாம் மறந்து
சாதனை படைக்கின்ற காலத்திலே
குறையின்றிப் பிறந்தோமே மனிதா!
நரைதோன்றிப் பிறந்த மண்ணுக்கே இரையாவது தான் வாழ்வென்ற நினைவா....?
எழுத்தாளர் பா. சுமதி குறித்து.. பி.காம், பி.ஏ ஆங்கிலம் படித்தவர். மான்டிசோரி கல்வியாளர், யோகாவில் டிப்ளமோ முடித்தவர்.எழுத்தாளர், கவிஞர், பேச்சாளர். யோகா ஆசிரியர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் திருவண்ணாமலை குழுமத்தில் பல்வேறு நிகழ்வுகளிலும் பங்கேற்றவர், உலக சாதனையாளர் விருது பெற்றவர். பன்னிரு திருமுறைகளைப் பாடுவதில் தேர்ச்சி பெற்றவர்.நெய்வேலி புத்தகத் திருவிழாவில் தொடர்ந்து பல ஆண்டுகள் சிறு கதைகள், கவிதைகள் எழுதிப் பரிசு பெற்றவர்)
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோவிற்கு அனுமதி கிடையாது: புதுச்சேரி சபாநாயகர் செல்வம்
உக்ரைன் - ரஷ்யா போர்.. இதுக்கு என்ட் கார்டே கிடையாதாய்யா.. லேட்டாகுமாம்.. அமெரிக்கா அறிவிப்பு!
டிட்வா புயல் பாதிப்பு...ஹெக்டேருக்கு ரூ.20,000 நிவாரணம்: அமைச்சர் k.k.s.s.r.ராமச்சந்திரன் அறிவிப்பு!
கன்னியாகுமரி மாவட்டத்துக்கு நாளை லீவு?.. என்ன காரணம் தெரியுமா.. வாங்க இதைப் படியுங்க!
மதகு சரி செய்யாததால் குழந்தை உயிரிழப்பு... திமுக அரசே பொறுப்பேற்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்!
ஆதி கும்பேஸ்வரர் கோவிலுக்கு ஏன் அந்தப் பெயர் வந்தது தெரியுமா?
திருநெல்வேலி மாவட்டத்தில்.. 2.33 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட வாய்ப்பு!
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா.. பரணி தீபத்தின் விசேஷம் என்ன தெரியுமா?
{{comments.comment}}