பிறந்த நாள் ஒவ்வொரு உயிரின் வெற்றி நாள்!

Mar 08, 2026,02:40 PM IST
- க.யாஸ்மின் சிராஜூதீன்

பிறந்த நாள் ஒவ்வொரு உயிரின் வெற்றி நாள்.. 

பிறப்பே வெற்றி என்றால் இறப்பு சரித்திரமாவதில் ஐயமில்லை... 

காத்திருத்தல் அவசியம்
பிறப்பும் பத்து மாதம் காத்திருத்தலின் வெற்றி... 

தனி மனிதனுக்கு முகவரிஅளிப்பது 
பிறந்த நாள்... 

நம் ஒவ்வொரு பருவமுயற்சியே
முழுமனிதனாக்குகிறது... 

பல வேடங்கள் வாழ்விலே சூட 
பல மேடைகள் இயற்கை அளிக்க ...

வெறும் நடிகராய்  நாம் இயக்குபவர் யாரோ...



பிறப்புக்கும் இறப்புக்கும் இடையே ..

வாழ்க்கை சுழலுது பலவழிதனிலே ... 

எத்தனை  இன்பங்கள்
மகிழ்வாக்க... 

எத்தனை ரணங்கள்
பண்படுத்த... . 

சிலைபோல் அழகாய் நம்மை செதுக்க .. 

இறைவன் சிற்பியாய் 
உருவெடுத்தான்... 

அனைத்து வரங்களும்  நம தாக்கி ... 

நிம்மதியை மட்டும்
மறைத்து வைத்தான்... 

உனதறிவை செயலாக்க
வாய்ப்பு எனும் சாவி தந்தான்... 

முயற்சிதனை விலையாக்கி
 வளங்களை அள்ளியெடுயென்றான்... 

தேடல் உள்ளவரை உடல் இயங்கும்... 

இயங்கும் வரை நீ
உயரத்திலே ... 

இல்லையென்றால் மண்ணடியிலே ... 

வாழும் வரை உலகினிலே இன்சொல்லை உனதாக்கு.... 

உதவியை நாடியவர்க்கு 
விருந்தாக்கு... 

புரளி பேசுவதை உதறி
பாராட்டும் மனம் கொள்.. 

குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை... 

அரவணைத்து வாழ் வாழ்க்கை சொர்க்கமாகும் .... 

எவ்வேடம் ஏற்றாலும் அதற்கேற்ப பணிவுகொள்  ... 

பொறுமையே  பேரின்பம் தரும்
ஆயுதம்... 

வாழ்க்கை என்பது தொடர்கற்றல்.,. 

கற்றது கை
மண்ணளவு .... 

ஒன்று பட்டால் 
உண்டு வாழ்வு.. 

வேற்றுமையில் ஒற்றுமை
நம் பாரதத்தின் ஆணிவேர்..
 
சிந்தனையிலே உயர் சிந்தனை நம் வாழ்க்கையின் ஆணிவேர்.... 

பிறந்த நாள் அனைத்து உயிர்களுக்கும் உண்டு.. 

அதை சிறந்த வெற்றி நாளாக்குவது நம் கையில் இருக்கு ... 

பிறந்த நாள் சாதாரணமானது அல்ல கடந்து செல்ல.. 

சாதிக்க வேண்டியது தலை நிமிர்ந்து வாழ... 

(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன் இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.  26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும்  whatsApp வழியாக  கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்)
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தீஞ்ச சக்தியிலிருந்து ஆட்களை இழுக்கும் நீங்க என்ன.. காஞ்சு போன சக்தியா? .. மு.க. ஸ்டாலின் தாக்கு

news

KG முதல் PG வரை இலவச கல்வி.. ஒடிசா அதிரடியை எல்லோரும் கடைப்பிடிக்கலாமே?

news

தவெக.,வை நோக்கி படையெடுக்கும் மாற்று கட்சியினர்... பலமா? பலவீனமா?

news

டீசல் விற்பனைக்கு கடும் கட்டுப்பாடு: மத்திய அரசு அதிரடி உத்தரவு!

news

Vijay Birthday: முதல்வராக முதல் முறையாக.. 52வது பிறந்த நாளைக் கொண்டாடத் தயாராகும் விஜய்

news

அதிமுக தேர்தல் தோல்வி எதிரொலி: மாவட்ட வாரியாக எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

news

பாஜவிலிருந்து விலகி தவெகவில் இணைகிறார் முன்னாள் எம்.எல்.ஏ விஜயதரணி

news

லியோனல் மெஸ்ஸியின் உலகக் கோப்பை வேட்டை எப்போது தொடங்குகிறது?

news

Seven Days, Twenty Kilometres.. மற்றும் மறக்க முடியாத சில நினைவுகள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்