மனமழை!

Nov 29, 2025,04:46 PM IST

- வ. சரஸ்வதி


மனசுக்குள் கொட்டித் தீர்க்கிறது மழை 

அவ்வப்போது பெய்யும் சலன மழை தான் என்றிருந்த எனக்கோ 

பெரும் வியப்பு

இப்படி ஒரு மழையை கண்டிரவில்லை 

இந்த வாழ்க்கை 

மனமட்டம் நீர்மட்டம் நிலை குலைந்து 

என் தவசை அசைக்கிறது 

கலைக்கிறது 

உன் அதீத பாசப்பொழிவால் 

பொலிவாகிவிட்ட எனக்கு 




உன் வலிமை புலப்பட்டு விட்டது 

புறப்பட்டு விட்டேன் 

எனை விட்டு 

கொஞ்சம் வெயில் அடிக்கட்டும் 

வெள்ளம் குறையட்டும் 

நானும் கொஞ்சம் கொஞ்சமாய் 

துளிர்த்துக் கொள்கிறேன்

உள்ளே உலர்ந்த மண்ணைத் தேடி

ஊற்றெடுக்க வழியின்றித் தவித்த வேளை

ஏதோ ஒரு ஞாபகத் தென்றல் வீசி

அன்பின் மேகங்கள் சூழ்கிறது.

கண்களின் இடுக்கு வழி கனமாய் இன்றி

கசிந்துருகும் மெல்லிய துளிகளாய் 

- மனமழை பொழிகிறது, மெல்ல!


(கதாசிரியர் வ.சரசுவதி. செள. பொட்டிப்புரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் இடை நிலை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். பல்வேறு தளங்களில் கவிதை, கட்டுரைகள்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!

news

கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்