சென்னை: வடக்கு அரபிக் கடலில் பகுதிகளில் நாளை புதிய காற்று சுழற்சி உருவாக உள்ள நிலையில், அது படிப்படியாக வலுவடைந்து புயலாக மாறக்கூடும் என்று டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் அறிவித்துள்ளார். இந்த புயலுக்கு சக்தி என்ற பெயரிடப்படவுள்ளது.
ஏற்கனவே மத்திய மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நீடித்து வருவதால், தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக தென் தமிழகத்திலும், வட தமிழகத்திலும், மழை பெய்து வருகிறது. இதனால் வெயிலின் தாக்கம் சற்று குறைந்துள்ளது.
இதற்கிடையே கர்நாடக கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்திய கிழக்கு அரபிக் கடலில் நாளை ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகக்கூடும். இது அடுத்தடுத்த நாட்களில் காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும், பின்னர் வடக்கு திசையில் நகர்ந்து படிப்படியாக வலுவடைய கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதே சமயத்தில் தென்மேற்கு பருவமழையும் முன்கூட்டியே துவங்க இருப்பதால் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் நாளை உருவாகும் மேலடுக்கு சுழற்சி, புயலாக வலுப்பெற கூடும் எனவும், அந்த புயலுக்கு சக்தி என பெயரிடப்படவுள்ளதாகவும் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் அறிவிப்பு போன்ற வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது,
உருவாகிறது சக்தி புயல்! முன்னதாக தென்மேற்கு பருவமழை துவங்கும்.
மத்திய கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கர்நாடகா கடலோர பகுதிகளில் மே 23ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.
அத்தாழ்வு பகுதி படிப்படியாக வலுவடைந்து வடகிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் மே 25/26ம் தேதிவாக்கில் புயலாக வலுபெறக்கூடும்.
இப்புயலிற்கு இந்திய வானிலை மையம் சக்தி(Shakthi) என்று பெயரிட உள்ளது.
இப்புயலின் காரணமாக தென்மேற்கு பருவமழை மே 24ம் தேதி துவங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. கர்நாடகாவில் மே 25ம் தேதியும், ஆந்திரா, தெலுங்கானா, ராயல்சீமா உள்ளிட்ட ஒட்டுமொத்த தென் இந்தியாவிலும் மே 28ம் தேதிக்குள் தென்மேற்கு பருவமழை துவங்க சாதக சூழல் காணப்படுகிறது என தெரிவித்துள்ளார்.
Power Tariff: வீடுகளுக்கு மின் கட்டண உயர்வு இல்லை.. கட்டண சலுகையும் தொடரும்.. அமைச்சர் சிவசங்கர்
டெல்லியில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்திற்கு..23ஆம் தேதி செல்கிறார் முதல்வர் மு.க ஸ்டாலின்..!
ஈழத்தமிழ்ச் சொந்தங்களுக்கு குடியுரிமை கிடையாது.. உச்சநீதிமன்ற தீர்ப்பு மனவலி தருகிறது.. சீமான்
இந்தியாவில் மீண்டும் கொரோனா... தமிழ்நாட்டில் 34 பேருக்கு தொற்று உறுதி: மத்திய அரசு அறிவிப்பு!
என் கணவரை விட்டுப் பிரிய மூன்றாவது நபரே காரணம்.. ஆர்த்தி ரவி பரபரப்பு குற்றச்சாட்டு!
தங்க நகைக்கடனுக்கு கடும் கட்டுப்பாடுகள்: ஆர்பிஐ புதாக 9 விதிமுறைகள் அறிவிப்பு!
அரபிக்கடலில் உருவாகிறது சக்தி புயல்.. டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் கணிப்பு..!
நீட் தேர்வால் 24வது மாணவர் உயிரிழப்பு... டம்மி அப்பா கூறியது அத்தனையும் பொய் : எடப்பாடி பழனிச்சாமி!
கடந்த காலங்களில் நடந்தது சாத்தான்களின் ஆட்சி... சாத்தான்குளம் சம்பவமே சாட்சி... அமைச்சர் சேகர்பாபு!
{{comments.comment}}