என்னவள்!

Apr 13, 2026,10:41 AM IST

- அ. தாமஸ்


நான் விரும்பி நேசிக்கும் திரையே; 

நான் தொடர்ந்து வாசிக்கும் உரையே;

என்னை அன்பால் ஆட்கொண்ட சிறையே ;

என்னுள்  நல்லெண்ணம் புகுத்திய மறையே ;

என்னை மகிழ்ச்சியால் நனைத்திட்ட மழையே ;

என் துன்பம் உதிர்த்த சாரலே ;

நான் கவிதையாய் நேசிக்கும் காவியமே ;

என் மனம் நிரம்பிய அழகோவியமே; 

வாழிய நீ வாழியவே!

எனக்காய் உதிரம் உதிர்த்து உறவினில் கலந்தவள் நீ !




தினமும் என்னை நினைத்து உள்ளுக்குள் கனன்றவள் நீ !

கனவாய்க் களைந்தாலும் என் நினைவில் நிலைத்தவள் நீ!

நான் இமயம் அடைந்திட துணையாய் நின்றவள் நீ !

கலங்கி நின்ற போது கண்ணீர் துடைத்து கரம் கொடுத்தவள் நீ !

நான் வளங்கள் பல பெற்று நலமாய் வாழ்ந்திடவே 

இறைவேண்டல் தினம் செய்தவள் நீ ! 

என் வரலாற்றைப் படிப்பவளும் நீ!

நாளைய உன் வரலாற்றைப் படைப்பவளும் நீ !

நல்மண மலரே! பலவண்ண மயிலே! என் எண்ண முகிலே! 

வாழிய நீ வாழியவே! 

பல்லாண்டுகள் வாழியவே! 

நீ வேண்டும் வளங்களை வரங்களாய்ப் பெற்று 

நலமோடு வாழ்ந்திடவே வாழ்த்தி மகிழ்கிறேன்.


(அ.தாமஸ் MSc, Bed, MPhil, MSc(psycho), Fscp(psycho), ஆசிரியர், வாணி கிராமம், சிவகங்கை மாவட்டம்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாட்டில்.. அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை: 11 மாவட்டங்களில் இன்றே மழை

news

ஆதம்பாக்கம் பறக்கும் ரயில் அடுத்த தலைமுறைக்கானதா?

news

US Celebrates Navaratri: அமெரிக்காவில் ஆரவார நவராத்திரி!

news

ஆயுத பூஜை - சரஸ்வதி பூஜை.. ஒட்டடை அடித்து வீட்டை ரெடி பண்ணலாமா?.. ஈஸி டிப்ஸ்!

news

ரம்யாவின் கவிதைத் தோட்டம்.. கனவுகளைத் தொலைக்காத பெண்கள்!

news

Chettinadu Recipes: அருமையான செட்டிநாட்டு ரெசிப்பி .. முருங்கைக் கீரை எள்ளு பொடி!

news

Proverb: அயத்தில் ஒரு கால் செயத்தில் ஒரு கால்.. அப்படீன்னா என்ன தெரியுமா?

news

சிவசங்கரி.. சமூக நியாயங்களையும்.. மனித உணர்வுகளையும் ஆழமாகத் தொட்டவர்!

news

Travel Time: அதிகம் கேட்கப்படாத ஹாரன்.. மனம் கவரும் கேரளம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்