சிந்தனைச் சிதறல்.. உமிழ்ந்திடும் நீராக இல்லாமல் உறிஞ்சிடும் நீராக இருப்போம்!

Jun 13, 2026,11:49 AM IST
- அ. தாமஸ்

உமிழ்நீரின் உன்னதம் உணராமல் உமிழ்ந்திடும் உலகம் இளநீரின் சுவைக்காக உணர்ந்தே உறிஞ்சிடும். எனவே உமிழ்ந்திடும் நீராக இல்லாவிட்டாலும் உறிஞ்சிடும் நீராக இருப்போம்; எந்நிலையிலும் நம் நிலையை பிறர் அறியப் படைப்போம்; இன்று உமிழ்பவர்கள் நாளை உறிஞ்சலாம் அல்லவா?

தன்னிலை மாறாமல் தகவமைப்பதில் நீருக்கு இணை நீர் மட்டுமே.எனவே இயன்றவரை நாமும் நீராக இருப்போம் எந்நிலையிலும் நம் நிலை மாறாமல் அந்நிலைக்கும் நம்மைத் தகவமைக்க.

பல வண்ணம் இணைத்தாலும், பல்சுவை ஊட்டினாலும் நீர் நீராகவே இருக்கிறது. எந்நிலையிலும் தன் சுயத்தை இழக்காமல் இணைத்ததை இழப்பதிலும் துணிகிறது. எனவே நாமும் நீராக இருப்போம் என்றும் நம் சுயத்தை இழக்காமலே இணைத்ததை இழக்க. 



எக்கறையையும் அக்கறையை ஏற்காமலேயே கலைக்கிறது நீர் அதன் மீது கொண்ட அக்கறையால். எனவே நாமும் எக்கறையையும் கலைவோம் அக்கறையோடு அக்கறை ஏற்காமல்.

(அ.தாமஸ் MSc, Bed, MPhil, MSc(psycho), Fscp(psycho), ஆசிரியர், வாணி கிராமம், சிவகங்கை மாவட்டம்)
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம் கட்டினால்...என்ன அதிமுக ஜெயக்குமார் இப்படி சொல்லிட்டார்?

news

மதுரை அரசாளும்.. மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்.. 17 ஆண்டுகளுக்குப் பிறகு!

news

முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: சேகர்பாபு, ஆ.ராசா மீது வழக்குப்பதிவு

news

சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில் தேங்காய் வைத்து பூஜை...இது நடக்க போவது உறுதியா?

news

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல்: திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு!

news

காலம் மாறிப் போச்சு.. ஒரு நிமிடக் கதை (17)

news

அரும்பானவள் கொஞ்சம் குறும்பானவள்!

news

மணவாழ்க்கை.. துணையாள் சொல்படி நட!

news

சிந்தனைச் சிதறல்.. நல்லவர்களாக இருங்கள்.. நற்சிந்தனையோடு இருங்கள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்