சிந்தனைச் சிதறல்.. சுமை என நினைக்கையில் சுகத்தினைத் தொலைக்கிறோம்!

Aug 01, 2026,02:28 PM IST

- அ. தாமஸ்


நம் பிறப்பு முதல் இறப்பு வரை, சுமை, சுமை என நினைக்கையில் சுகத்தினைத் தொலைக்கிறோம்; சுகம் என நினைக்கையில், சுமையையும் ரசிக்கிறோம். 


வயிற்றில் நம்மையும், கையில் பையையும் சுமந்தாலும், கையில் உள்ளதைச் சுமை எனக் கருதும் தாய், வயிற்றில் உள்ளதைச் சுகமாகவே கருதுகிறாள். சுகம் எனச் சுமந்தவளை, சுமை எனக் கருதுவது நியாயம் இல்லை தானே?


தகுதியற்ற நீரைக் குடித்தும், தகுதியான பாலை கொடுப்பவளும்; கிடைப்பவை அனைத்தையும் உண்ணாமல், மகவுக்கென காத்துக் கொடுப்பவளுமே தாய். இல்லாதபோது தேடிக் கொடுத்து நம்மைக் காத்தவளுக்கு, நம்மிடம் இருக்கும் போது தேடித் தேடி கொடுப்போம். அவளின் தேவையை அறிந்து காப்போம்.




தாயில்லா வாழ்க்கை, சொர்க்கத்தில்கூட நரகத்தைக் கற்பிக்கிறது; தாயோடு வாழ்க்கை, நரகத்தைக்கூட சொர்க்கமாகவே காண்பிக்கிறது. தாய் அன்புக்கு நிகர் தரணியில் இல்லை. அப்படி கருணையோடு, அன்பை அளவின்றி கொடுத்தவள்தான் இன்று உணவுக்காகவும், உறவுக்காகவும், நல் உணர்வுக்காகவும் காத்துக் கிடக்கிறாள். எனவே, மிகுதியாக இல்லாவிட்டாலும், தகுதியோடு கொடுப்போமே.


நாம் அறியாதபோது அறிவைப் புகட்டியவளைத்தான், அறிந்துவிட்டோம் என்பதற்காக காணாமலே கடக்கிறோம். விதை இல்லா மரங்கள் இல்லை; அவள் இல்லையேல் நாம் இல்லை என்பதை மறவாது தினம் தினம் நினைப்போம். அவளின் நினைவினில் திளைப்போம்.


(அ.தாமஸ் MSc, Bed, MPhil, MSc(psycho), Fscp(psycho), ஆசிரியர், வாணி கிராமம், சிவகங்கை மாவட்டம்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம் கட்டினால்...என்ன அதிமுக ஜெயக்குமார் இப்படி சொல்லிட்டார்?

news

மதுரை அரசாளும்.. மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்.. 17 ஆண்டுகளுக்குப் பிறகு!

news

முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: சேகர்பாபு, ஆ.ராசா மீது வழக்குப்பதிவு

news

சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில் தேங்காய் வைத்து பூஜை...இது நடக்க போவது உறுதியா?

news

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல்: திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு!

news

காலம் மாறிப் போச்சு.. ஒரு நிமிடக் கதை (17)

news

அரும்பானவள் கொஞ்சம் குறும்பானவள்!

news

மணவாழ்க்கை.. துணையாள் சொல்படி நட!

news

சிந்தனைச் சிதறல்.. நல்லவர்களாக இருங்கள்.. நற்சிந்தனையோடு இருங்கள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்