தேவைக்குப் பயன்படுத்துவோம்.. தேவையற்றதை தேவையானவருக்குப் பகிர்ந்தளிப்போம்!

Aug 12, 2026,05:25 PM IST

- அ. தாமஸ்


தேவைக்குப் பயன்படுத்துவோம்; தேவையற்றதை தேவையானவருக்குப் பகிர்ந்தளிப்போம். பிறருக்குத் தேவையற்றது நமக்கு தேவையானதாகவும், நமக்குத் தேவையற்றது பிறருக்குத் தேவையானதாகவும் இருக்கலாம். பயனற்றதைச் சேர்ப்பது அனைத்தையும் பாழ்படுத்தும். பழையன களையாமல் புதியன சேர்க்க முடியாது. எனவே, புதியன சேர்க்க பழையன களைவோம்.


எது பயனற்றது, பயனுள்ளது என்பதை பகுத்தறியும் பக்குவம் இல்லாததால், தான் அனைத்தையும் தேடித் தேடிச் சேர்க்கிறோம். அதன் விளைவே கையில் இருப்பதை பையில் தேடுவதும், மடியில் இருப்பதை மரத்தில் தேடுவதும், படுக்கையில் இருந்து கொண்டே படுக்கையைத் தேடுவதுமாக நம் மனம் பாடாய்படுகிறது. இந்நிலை தவிர்க்கவாவது பயனற்றதைப் பகிர்ந்தளிப்போம்.




நாளை தேவைப்படும் என்று பலவற்றைச் சேர்க்கிறோம்; நாளைக்கு, நாமே தேவைப்படாத பொழுது நாம் நாளைக்காக சேர்த்தது  யாருக்குப் பயன்படும்? எனவே இன்றைய நாளை பொறுப்போடு களிப்போம்; நாளைய நாளின் தேவையை மறப்போம்; ஒவ்வொரு நாளும் மகிழ்வினில் திளைப்போம்.


பகிர்ந்தளிக்கப்பட வேண்டியது பொருள் மட்டுமல்ல நல்லறிவும் தான், பொருள் குப்பையை விட அறிவுக் குப்பை அதீத ஆபத்தானது. நிறைந்ததைக் குறைக்காமல் மேலும் நிரப்புவது  சாத்தியம் இல்லைதானே. எனவே, அறிந்ததைக் கொடுப்போம்; அறியாததை தினம் அறிந்திட நினைப்போம்; அறிந்ததைப் பகிர்ந்தே பகிர்வின் மகிழ்வினில் நிலைப்போம்.


(அ.தாமஸ் MSc, Bed, MPhil, MSc(psycho), Fscp(psycho), ஆசிரியர், வாணி கிராமம், சிவகங்கை மாவட்டம்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கதை அல்ல நிஜம்.. "ரோஷினியின் டைரி" .. அவள் எழுதிய வரிகள் நிஜமானது!

news

Malliga Selvaraj: அன்னை மடி!

news

தென்தமிழ் தலையங்கம்: திரைக்கலைத் தாத்தா சிங்கீதம் சீனிவாச ராவ்!

news

Asiad 2026 Cricket: தங்க மகளிரைப் பின்பற்றி.. பாகிஸ்தானை வீழ்த்தி தங்கம் வென்ற இந்திய ஆடவர்!

news

தவெக வேட்பாளர் குறித்து உருவக் கேலி: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் விஜய் கண்டனம்!

news

தாராபுரம் தவெக வேட்பாளரை உருவகேலி செய்த விவகாரம் : மு.க.ஸ்டாலின் மீது புகார்

news

மதுராந்தகம் இடைத்தேர்தல்: செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்

news

ஜெம் கிரானைட் வீரமணி மீது மேலும் ஒரு பெண் புகார்: தீவிரமடையும் விசாரணை

news

Malliga Selvaraj Poem: கோலங்கள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்