Aadi Amavasai: அமாவாசை தினத்தில் சமைக்க வேண்டிய காய்கறிகள் என்ன?

Jul 24, 2025,12:02 PM IST
ஆடி அமாவாசை: விசுவாவசு வருடம் 25 ஜூலை 24ஆம் தேதி ஆடி மாதம் எட்டாம் நாள் அமாவாசை நாளாக அனுஷ்டிக்கப்படுகிறது.

புரட்டாசி  மகாளய அமாவாசை, தை அமாவாசை போன்றே ஆடி அமாவாசையும் சிறப்பான நாளாக கருதப்படுகிறது. இந்த நாட்களில் குலதெய்வ வழிபாடும், பித்ருக்களின் வழிபாடும், புனித நதிகளில் நீராடுவதும் புனிதமானதாகும்.

சூரியனும் சந்திரனும் இணையும் நாள்தான் அமாவாசை தினமாகும். இந்த நாளில் காற்று, வெப்பம், கடல், நம் உடல் ஆகியவற்றில் சில மாற்றங்கள் ஏற்படும். கடலிலும் அலைகள் அதிகமாகவும், வெப்பம் சமநிலை அற்றதாகவும் இருக்கும் .அதுபோன்றே நமது  உடலும் சம நிலையை இழக்கும். குறிப்பாக மூளை பகுதி, நரம்பு பகுதி மற்றும் உடலில் உள்ள நீர்ச்சத்து ஆகியவை சற்று பாதிப்புக்கு உள்ளாகும். எனவே முன்னோர்கள் அமாவாசை தினங்களில் என்ன சமைக்கலாம் எதை உண்ணலாம் எதை உண்ணக்கூடாது என்று சில வழிமுறைகளை வகுத்துள்ளனர். அமாவாசை தினத்தில் பொட்டாசியம் மற்றும் சோடியம் நிறைந்துள்ள காய்கறிகளை அதிகம் சமைக்க வேண்டும்.



அமாவாசை தினத்தில் பூசணிக்காய் சமைப்பது என்பது ஒரு ஐதீகமாக உள்ளது .அமாவாசை அன்று முன்னோர்களை வழிபடுவதுடன் அவர்களுக்கு பிடித்த உணவுகளை சமைத்து படையல் போட்டு வழிபடுவது வழக்கம். இதில் பூசணிக்காய், எலுமிச்சை போன்றவற்றை வியாபார ஸ்தலங்களில் பலி கொடுப்பார்கள் .இதனால் வியாபாரம் செழிக்கும் வீட்டில் மகிழ்ச்சியும் செல்வமும் கல்வியும் பெருகும் என்பது நம்பிக்கை.

அமாவாசை தினத்தில் சமைக்க வேண்டிய காய்கறிகள் என்ன? என்பதை பார்ப்போமா.. சமையலில் கட்டாயம் வாழைக்காய் இருக்க வேண்டும். ஏனெனில் வாழைக்காய் சமைப்பதற்கு ஒரு சுவாரசியமான தகவல் உண்டு. வாழைமரம் எப்படி வெட்ட வெட்ட அதிகம் வளரக்கூடியதோ அதேபோல் நம் முன்னோர்களின் ஆசிகளை பெறுவதோடு நம் குலமும் வாழையடி வாழையாக தழைக்கும் என்பது சாஸ்திரம். எனவே வாழைக்காய் அமாவாசைகளில் சமைப்பது சிறந்ததாக கருதப்படுகிறது.

இதனுடன் அவரைக்காய், புடலங்காய், வாழைத்தண்டு ,வாழைப்பூ பாகற்காய், சேனைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு, பிரண்டை மாங்காய் ,இஞ்சி, நெல்லிக்காய் பூசணிக்காய் ,கோதுமை , நாட்டு வெல்லம், உளுந்து இவற்றில் தங்களால் இயன்றவற்றை சேர்த்து சமைப்பது சிறந்தது. கீரைகளில் அகத்திக்கீரை சமைப்பது மிகவும் சிறப்பு. மேலும் சேர்க்க கூடாத காய்கறிகள் என்ன என்று பார்த்தோம் என்றால் முள்ளங்கி ,முட்டைக்கோஸ், நூல்கோல் ,பீன்ஸ், உருளைக்கிழங்கு ,கேரட், கத்தரிக்காய், வெண்டைக்காய், காலிபிளவர் ,ப்ரோக்கோலி, பட்டாணி பெருங்காயம், முருங்கைக்காய் ,பீட்ரூட் சுரைக்காய், வெங்காயம் போன்றவற்றை அமாவாசை தினங்களில் சமையலில் சேர்ப்பதை தவிர்க்கவும்.

பருப்பு வகைகளில் அமாவாசை தினத்தில் துவரம் பருப்பு சேர்ப்பதை தவிர்த்து பாசிப்பருப்பு சேர்ப்பது சிறந்தது. அசைவ உணவுகளை உண்பதையும் சமைப்பதையும் அமாவாசை தினங்களில் தவிர்ப்பது நல்லது. நம் முன்னோர்கள் வகுத்துள்ள ஒவ்வொரு செயல்களிலும் ஒரு காரணம் இருக்கும் என்பதை நாம் புரிந்து கொண்டு அதற்கு தகுந்தார் போல் கடைபிடித்து வாழ்வது சிறந்தது.

அமாவாசை தினங்களில் பெற்றோர் இல்லாத ஆண்கள் விரதம் இருந்து தர்ப்பணம் கொடுப்பது நல்லது .சுமங்கலி பெண்கள் விரதம் மேற்கொள்வதை தவிர்க்கவும் .அன்றைய தினம் அவர்கள் முன்னோர்களுக்கு பிடித்த உணவுகளை சமைத்து படையல் போட்டு வழிபடுவது சிறந்தது என சாஸ்திரங்கள் கூறுகின்றன. மேலும் தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன் .உங்கள்  ஸ்வர்ணலட்சுமி.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்