ஆடி மாதம் பிறந்தாச்சு.. அம்மன் கோவில்கள் தோறும் களை கட்டும் விசேஷங்கள்!

Jul 17, 2025,10:20 AM IST

- ஸ்வர்ணலட்சுமி


விசுவாவசு வருடம் 2025, ஜூலை 17ஆம் தேதி வியாழக்கிழமை அன்று ஆடி மாதம் பிறந்துள்ளது. ஆடி மாதத்தின் சிறப்புகளைக் காணலாம்.


ஆடி மாதம் என்றாலே அம்மன் வழிபாடுகளும், கிராம தெய்வங்களும், எல்லை காவல் தெய்வங்களும் குறிப்பாக மாரியம்மனுக்கு திருவிழா நடக்கும் மாதம் ஆகும்.


ஆடி முதல் நாள் தொடங்கி மாதம் முழுவதும் பல விசேஷங்கள் உள்ளது .ஆடி வெள்ளி, ஆடி செவ்வாய் ,ஆடிப்பூரம் ஆடிப்பெருக்கு (ஆடி பதினெட்டு) என பல விசேஷங்கள் உடைய சிறப்பான மாதமாகும்.


தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களில் விசேஷ பூஜைகள் இன்று நடைபெறுகிறது .ஆடி மாதம் தேய்பிறை அஷ்டமி நாளன்று பிறக்கிறது .ஆடி மாதத்தின் தொடக்கம் ஜூலை 17 வியாழக்கிழமை துவங்கி ஆகஸ்ட் 16 சனிக்கிழமை அன்று முடிவடைகிறது.




ஆடி மாதம் என்றாலே சக்தி அதாவது பார்வதி தேவியின் சக்தி சிவனின் சக்தியை விட அதிகமாக இருக்கும் என்பது ஐதீகம். இம்மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமை , செவ்வாய்க்கிழமை, கிருத்திகை ,அமாவாசை பௌர்ணமி என அனைத்து நாட்களுமே சிறப்பான நாட்களாகும்.


சேலம் ,நாமக்கல் ,ஈரோடு போன்ற மாவட்டங்களில் ஆடி முதல் நாளை முன்னிட்டு தேங்காய் சுடும் பண்டிகை கொண்டாடப்படுகிறது.தேங்காய் சுடும் முறை : தேங்காயினை அதன் மீது உள்ள நார் போக கல்லில் நன்றாக தேய்த்து, பிறகு தேங்காயின் கண்களை திறந்து அதில் உள்ள நீரை வெளியேற்றி அதன் உள் பொட்டுக்கடலை ,பச்சரிசி வெல்லம்  ,எள்ளு , ஏலக்காய் போன்றவற்றை கலந்து தேங்காயில் வைத்து ,அழிஞ்சி மர குச்சியை சொருகி நெருப்பு மூட்டி தீயில் வாட்டி சுடுவார்கள். அந்த சுட்ட தேங்காயை பிரசாதமாக கோவிலில் படைத்து குடும்பத்தில் உள்ள அனைவரும் பகிர்ந்து சாப்பிடுவது வழக்கம்.


புராணங்களின்படி மகாபாரதப் போர் ஆடி 1ஆம் தேதி தொடங்கி 18 நாட்கள் நடைபெற்றதாக கூறப்படுகிறது. அதனால்தான் எந்த ஒரு நல்ல காரியங்களையும் இந்த 18 நாட்கள் செய்வதை தவிர்ப்பார்கள். இதனை போர் காலம் என்று அழைப்பர். புதிதாக திருமணம் நடைபெற்ற தம்பதியரை பெண் வீட்டார் அழைத்து விருந்து  உபசரணை செய்து கொண்டாடி மகிழ்வர்.


தை மாதம் முதல் ஆனி மாதம் வரை உத்திராயண காலமாகவும் ,ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை தட்சிணாயன காலமாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. "ஆடிப்பட்டம் தேடி விதை" என்ற பழமொழிக்கேற்ப இந்த மாதத்தில் விதை விதைப்பதை முன்னோர்கள் மேற்கொண்டனர். ஏனெனில் ,தட்சிணாயன காலம் அதாவது ஆடி மாதத்தில் சூரியனின் ஒளி கதிர்கள் விவசாயத்திற்கு உகந்ததாக இருக்கும்.


மேலும் ஆடி மாதம் அம்மனுக்கு வேப்பிலையை சாற்றி வழிபடுவதும், கூழ் ஊற்றும் விழா நடத்துவதும் பரவலாக நடைபெற்று வருகிறது.ஆடி மாதத்தில் வேப்பிலை கொழுந்துகளுக்கு அபார மருத்துவ மற்றும் தெய்வீக குணம் உண்டு என்று கூறப்படுகிறது .ஆடி மாதத்தில் பொதுவாகவே காற்று மிகவும் அதிகமாக வீசும் அதற்காகவே எளிதில் ஜீரணம் செய்யக்கூடிய வகையில் கூழ் அருந்துவது நல்லது இது ஆரோக்கியம் மேம்படும்.


கோவை கரூர் திருப்பூர் சேலம் போன்ற கொங்கு மண்டல பகுதிகளில் ஆடி முதல் நாள் அன்று தேங்காய் சுடும் பண்டிகை விமர்சையாக கொண்டாடப்படுகிறது. ஆடி மாதத்தில் அம்மனுக்கு சாற்றப்படும் வளையல்களை பெண்கள் அணிந்து கொண்டால் திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், நீங்காத செல்வம்  சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்.


ஆடி மாதம் பீடை மாதம் என்று அழைக்கப்படுகிறது. ஆனால் அதன் உண்மை யாதெனில் பீட மாதம் என்பதுதான் அதன் பெயர், அதாவது பீடத்தில் இறைவனை வைத்து வழிபட வேண்டிய மாதம். ஆடி மாதத்தில் அம்பிகை வழிபட வீட்டில் சுப காரியங்கள் தடை இன்றி நடைபெறும் என்பது நம்பிக்கை.


இவ்வாறு ஆடி மாதம் முழுவதும் அம்பிகையை வழிபட்டு அனைவரும் நல்வாழ்வு வாழ்வோமாக வரைந்து எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி .

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கலகமூட்டிக் குளிர்காய நினைக்கும் தீயவர்களின் எண்ணத்துக்கு இடம் கொடுக்காதீர் -முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

தமிழ்நாட்டில் நாளை 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை... வானிலை மையம் தகவல்!

news

திமுக அரசு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாததால் தான் ஆசிரியர்கள் போராடுகின்றனர்... சீமான் ஆவேசம்!

news

பெங்களூரு கூட்ட நெரிசலுக்கு விராட் கோலி விடுத்த வீடியோ அழைப்பே காரணம்.. கர்நாடக அரசு

news

ஏர் இந்தியா விமானத்தின் எரிபொருள் சப்ளையை கேப்டன்தான் துண்டித்தார்.. அமெரிக்க ஊடகம் தகவல்

news

ஆகஸ்ட் முதல் 125 யூனிட் வரை மின்சாரம் இலவசம்: பீகார் முதல்வர் நிதிஷ்குமார் அறிவிப்பு!

news

காமராஜர்.. உயிருடன் இருந்தபோது தொடங்கியது.. திமுக மன்னிப்பு கேட்க வேண்டும்.. அன்புமணி ராமதாஸ்

news

காமராஜர் குறித்து பரப்பிய கட்டுக்கதைகள்.. ஜோதிமணி வேதனை.. பெரிதுபடுத்தாதீர்கள்.. திருச்சி சிவா!

news

வயிறு உப்புசமா இருக்கா?.. இதுக்கு இந்த பழக்க வழக்கங்களே காரணமா இருக்கலாம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்