சென்னை: நடிகர் தனுஷ்-ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் நவம்பர் 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று சென்னை குடும்ப நல நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நடிகர் தனுஷுக்கும், நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யாவிற்கும் கடந்த 2004ம் ஆண்டு நவம்பர் 18ம் தேதி இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
தனுஷ்- ஐஸ்வர்யா இடையேயான கருத்துவேறுபாட்டை சரிசெய்ய அவர்களுடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள்
முயற்சித்து வந்தனர். ஆனால், இருவரும் விவாகரத்து பெறுவதில் உறுதியாக இருப்பதாக தெரிவித்தனர். இதனையடுத்து இவ்விருவரும் பரஸ்பர விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி தனுஷ்- ஐஸ்வர்யா இருவரும் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். இந்த மனு மீதான விசாரணை கடந்த 2ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் நேரில் ஆஜராகவில்லை. இதனால் இந்த வழக்கு விசாரணையை குடும்பநல கோர்ட் நவம்பர் 21ம் தேதிக்கு தள்ளி வைத்தது. அன்று இருவரும் நேரில் ஆஜராக வேண்டும் என்று கோர்ட் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது முதலில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆஜராகியிருந்தார். தனுஷ் வந்து கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து 12 மணிக்கு மேல் விசாரணை தொடங்கியது. இருவரும் அப்போது ஆஜரானார்கள். விவாகரத்து பெறுவதில் இருவரும் உறுதியாக இருப்பதாக தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி அறிவித்தார். அன்றே அவர்களுக்கு விவாகரத்து வழங்கி தீர்ப்பளிக்கப்படும் என்று தெரிகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்
அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!
Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!
படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!
எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!
நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!
புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து
{{comments.comment}}