சென்னை: சென்னையில் நேற்று நடைபெற்ற கலைஞர் 100 விழாவின் நிறைவாக வித்தியாசமான நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. அது பலரின் கவனத்தையும் ஈர்த்த நிலையில் ஒரு வேளை டிசைன் செய்தது அவரா இருக்குமோ என்று எல்லோரும் ஒருவர் பக்கம் திரும்பிப் பார்த்தபோது.. ஆமா நான் வடிவமைத்த டிசைன்தான் என்று அவரும் பெருமிதத்தோடு ஆமோதித்துள்ளார்.
அவர் யார் என்பதை அவரே சொல்லி விட்டபோது நாம் மட்டும் நிறைய சஸ்பென்ஸ் வைக்க வேண்டியதில்லை.. அந்த டிசைனைச் செய்தது அவரேதான்.. அதாங்க நம்ம "புதுமைப்பித்தன்" பார்த்திபன்தான்.

தமிழ்த் திரையுலகம் சார்பில் நேற்று கலைஞர் 100 விழா நடைபெற்றது. கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடந்த விழாவில் தமிழ்த் திரையுலகின் மூத்த கலைஞர்களான கமல்ஹாசன், ரஜினிகாந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நடிகர் நடிகைகள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் என பல தரப்பினரும் பங்கேற்றனர்.
இருப்பினும் விஜய், அஜீத் போன்ற இளம் தலைமுறை முக்கியக் கலைஞர்கள் பலரும் பங்கேற்காதது பெரும் ஏமாற்றமே. இந்த விழாவில் வித்தியாசமான நினைவுப் பரிசு ஒன்றைக் கொடுத்தனர். மேடையில் கொண்டு வரப்பட்ட அந்தநினைவுப் பரிசு பலரது கவனத்தையும் ஈர்த்தது.
ஒரு பெரிய சைஸ் பேட்.. அதில் சொருகப்பட்ட பேப்பர்.. அதில் ஒரு வாசகம் இடம் பெற்றிருந்தது.. அது..

ஐயா
ஐயமில்லை
காற்றுள்ள வரை தமிழும் தமிழ் உள்ளவரை தங்களின் நினைவும் நிலைக்கும்
கலைஞர் 100 அல்ல கலைஞர் ஆயிரம் கொண்டாடுவோம்
தங்களின் மறுபதிப்பாம் எங்களின் முதல்வர் மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கு இப்ப பரிசினை வழங்கி உங்களின் வாழ்த்துக்களை பெற்றுக் கொள்கிறோம்
வணக்கத்துடன் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம்
என்று எழுதப்பட்டிருந்தது.. இதுதான் அந்த வித்தியாசமான பரிசு.. இந்த பரிசு முதல்வரை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த விழாவுக்கு வந்தவர்களையும் கவர்ந்தது. வித்தியாசமான டிசைனா இருக்கே.. ஒரு வேளை டிசைன் ஐடியா அவரோடதா இருக்குமோ என்று பலரும் பார்த்திபனைத்தான் நினைத்தார்கள்.. காரணம், இதுமாதிரி யாரும் யோசிக்காத யோசிக்க முடியாத ஐடியாவெல்லாம் அவரிடமிருந்துதான் பொதுவாக வரும் என்பதால்.

இப்போது பார்த்திபனே கூறியிருக்கிறார்.. இந்த டிசைன் நான் வடிவமதைத்ததுதான் என்று. இதுகுறித்து அவர் போட்டுள்ள டிவீட்டில், கலைஞரின் நினைவாக நேற்று வழங்கிய பரிசு நான் வடிவமைத்து. இரு மரத்தை இழைத்து pad&paper ஆக்கியது திரு சண்முகம். அதில் பித்தளை க்ளிப்பை சொருகியது திரு கேசவன்.
என் பெயரை அதில் பொறிக்காமலே சிலர் கேட்டார்கள் “இது நீங்கள் செய்ததா?”வென. மகிழ்ச்சி. நேரமின்மையால் நான் பேசா விட்டாலும் என் குரல் k s ரவிக்குமார் நாடகத்தில் ஒலித்தது.
சரி…
அடுத்து…
ஞாயிறு : ஓய்வெடுக்க அல்ல! எனக்கு வேலையிருக்கு நிறைய ! Good morning friends என்று கூறியுள்ளார் பார்த்திபன்.
உண்மையிலேயே டிசைன் ரொம்பவே நல்லாருக்கு!
புகைப்படங்கள்: Radhakrishnan Parthiban
தொடர் உயர்வில் தங்கம் விலை... இன்றும் சவரனுக்கு ரூ.800 உயர்வு!
அவார்டுகளைக் குறி வைக்கும் சூப்பர் மேன்.. தீவிரப் பிரச்சாரத்தில் குதித்த வார்னர் பிரதர்ஸ்
மரத்தை வைத்தவன் தண்ணீர் ஊற்றுவானா?
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 25, 2025... இன்று ஆனந்தம் தேடி வரும் ராசிகள்
அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!
கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!
23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்
அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!
{{comments.comment}}