அதிமுக - பாஜகவை வீழ்த்துவோம்.. திமுக கூட்டணியை ஆதரிக்கிறோம்.. நடிகர் கருணாஸ் அறிவிப்பு

Mar 21, 2024,07:18 PM IST

சென்னை: திமுக கூட்டணிக்கு முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவர் கருணாஸ் ஆதரவு தெரிவித்துள்ளார்.


2016ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்ற திருவாடனை தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவர் கருணாஸ். ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் திமுக கூட்டணி பக்கம் சேர்ந்தார். கடந்த சட்டப்பேரவை தேர்தலில் அவர் போட்டியிடவில்லை. 


இந்த நிலையில் தான் வரும் 2024ம் ஆண்டிற்கான லோக்சபா தேர்தலில், திமுக கூட்டணிக்கு முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவர் கருணாஸ் ஆதரவு தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:




பாஜக என்னும் பாசிச சனாதன சக்தியை வீழ்த்த அடிமை அதிமுகவை விரட்ட, நாம் ஒரு குடையின் கீழ் அணியாக வேண்டியிருக்கிறது. அதற்கான களமாக இந்த நாடாளுமன்றத் தேர்தலை பயன்படுத்தி நாட்டை காக்க வேண்டும். மதவெறி சக்திகளை அடியோடு வீழ்த்தி, இந்தியாவில் மதநல்லிணக்கம் மாண்புற, மக்கள் ஜனநாயகத்தை மீட்க, சமூக நீதியை காக்க இந்திய கூட்டணியை 2024 நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்கிற ஒற்றை இலக்குடன் திமுகவை முக்குலத்தோர் புலிப்படை கட்சி ஆதரிக்கிறது. 


இனி மோடி ஆட்சி மீண்டும் வந்தால் இந்தியா பெரும் முதலாளிகளின் கையில் கார்ப்ரேட்டின் கொள்கைக் கூடாரமாகிவிடும். கடந்த 10 ஆண்டுகாலமாக மத்தியில் ஆட்சி செய்த பாஜக அரசின் மக்கள் விரோத ஆட்சியை அகற்றிட, தமிழ்நாட்டில் அடிமை துரோகக் கட்சியான அதிமுகவை இந்த நாடாளுமன்றத் தேர்தலில் தோற்கடித்திட நமக்கு கிடைத்த சரியான வாய்ப்பாகும்.


திமுகவிற்கு பல்வேறு தோழமைக் கட்சிகள் தமது ஆதரவை தெரிவிக்கும் அதே வேளையில் பலம் வாய்ந்த இக்கூட்டணியை 40 இடங்களில் வெற்றி பெறச் செய்ய திமுகவிற்கு எங்களது ஆதரவை தெரிவித்துக் கொள்கிறோம். மக்கள் விரோத சனாதன கட்சிகளை விரட்ட, அடிமை துரோக  அதிமுகவை வீழ்த்த திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து 40 தொகுதிகளிலும் முக்குலத்தோர் புலிப்படை கட்சி தனது பிரச்சாரத்தை மேற்கொள்ளும் என குறிப்பிட்டுள்ளார். 


-  மதுரை விமான நிலையத்திற்கு சுதந்திரப் போராட்ட வீரர் தலைவர் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் பெயரை சூட்ட ஒன்றிய அரசு பரிந்துரைக்க வேண்டும்.


- பசும்பொன் தேவர் ஜெயந்தி விழாவை அக்டோபர் 30 அன்று அரசு விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும்.


- மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களால் கள்ளர், மறவர், அகமுடையார் ஆகியோரை தேவரினம் என அறிவித்த அரசு ஆணையை நடைமுறைப்படுத்த வேண்டும். இரண்டரை கோடி மக்கள் தொகை உள்ள முக்குலத்தோர் சமூகத்திற்கு 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.


- தமிழ்நாட்டில் சாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும்.


-  ஒன்றிய அரசு புதிதாக கட்டியுள்ள பாராளுமன்ற வளாகத்தில் வெள்ளையரை வெளியேற்ற அரும்பாடுபட்ட சுதந்திரப் போராட்ட வீரர்கள் மாமன்னர் மருதுபாண்டியர் சிலை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஜூலை 28, 2025... இன்று ராஜயோகம் தேடி வரும் ராசிகள்

news

பஹல்காம் ரத்தம் இன்னும் காயவில்லை.. அதற்குள் பாகிஸ்தானுடன் விளையாட்டா?.. பிசிசிஐக்கு எதிர்ப்பு!

news

முதல்வரின் கோரிக்கை மனு... தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியிடம் வழங்கப் போவது யார் தெரியுமா?

news

தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டம்!

news

நான் வெற்றி பெற்றவன்.. இமயம் தொட்டு விட்டவன்.. பகையை முட்டி விட்டவன்.. கமலுக்கு வைரமுத்து வாழ்த்து!

news

திமுக ஆட்சியின் போலீசுக்கே பாதுகாப்பு இல்லை... சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது: எடப்பாடி பழனிச்சாமி

news

கோவை, நீலகிரிக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

வைகோவால் மனஉளைச்சல்.. ஆகஸ்ட் 2ம் தேதி உண்ணாவிரதம்.. அறிவித்தார் மல்லை சத்யா

news

கார்கில் வெற்றி தினம்.. தியாகிகளின் நினைவிடத்தில் குடும்பத்தினர், பொதுமக்கள் வீர அஞ்சலி

அதிகம் பார்க்கும் செய்திகள்