விஜயகாந்த் மகன் படத்தில்.. சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் ராகவா லாரன்ஸ்..!

Mar 22, 2024,05:02 PM IST

சென்னை: விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் படைத்தலைவன் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் ராகவா லாரன்ஸ், எனக்கு சம்பளம் வேண்டாம். ஏழ்மையில்  இருக்கும் குடும்பங்களுக்கு உதவுங்கள். நான் எவ்வளவு நிமிடம் வருகிறேன் என்பது முக்கியமல்ல. தம்பி சண்முக பாண்டியனுக்காக நான் இந்த படத்தில் இருப்பது மகிழ்ச்சி என்று பெருந்தன்மையுடன் கூறியதாக இப்பட இயக்குனர் யூ.அன்பு தெரிவித்துள்ளார்.


தமிழ்நாட்டில் சிறந்த அரசியல் தலைவரும் நடிகருமான விஜயகாந்த் கடந்த ஆண்டு உடல்நல குறைவால் மறைந்தார். இவருடைய இறப்பு செய்தி கேட்டு ஒட்டுமொத்த தமிழகமும் கதறி துடித்தது. இவருடைய நினைவிடத்தில் இன்று வரை பொதுமக்கள், ரசிகர்கள், தொண்டர்கள் என அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.


இந்த சூழ்நிலையில் நடிகர் விஜயகாந்தின் மறைவிற்குப் பின் அவருடைய இளைய மகன் சண்முக பாண்டியனுக்கு நடிகர் சங்கம் சார்பில் ஆதரவு கொடுக்க வேண்டும் என அனைவரும் ஒன்றுகூடி பேசி வந்தனர். அப்போது நடிகர் ராகவா லாரன்ஸ், சண்முக பாண்டியனுக்கு நான் உதவி செய்கிறேன் என்ற வீடியோ பதிவு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டார். அந்த வீடியோவில் நான் எதிர்காலத்தில் சண்முக பாண்டியன் நடிக்கும் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க தயாராக இருக்கிறேன் எனவும் தெரிவித்திருந்தார். இந்த வீடியோவை பார்த்த இயக்குனர் அன்பு, நடிகர் ராகவா லாரன்ஸை சண்முக பாண்டியன் நடிக்கும் படைத்தலைவன் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட வைத்துள்ளனர். இதைப் பற்றி இயக்குனர் கூறுகையில்,




நான் மாஸ்டரை எப்படியாவது இந்த படத்தில் கொண்டு வர வேண்டும் என்று விரும்பினேன். படத்தில் முக்கியமான இடத்தில் 5 நிமிட காட்சிக்கு மட்டுமே இடம் இருந்தது. இதை மிகுந்த தயக்கத்துடன்  ராகவா லாரன்ஸ் மாஸ்டர் அவர்களிடம் கூறினேன். ஆனால் அவர் எந்த யோசனைக்கும் இடம் தராமல், நான் நடித்து தருகிறேன். எவ்வளவு நிமிடம் நான் வருகிறேன் என்பது முக்கியம் அல்ல. தம்பி சண்முக பாண்டியன் படத்தில் நான் இருப்பது மகிழ்ச்சி என்றார். இதை கேட்டதும் இயக்குனராக எனக்கு மிகுந்த சந்தோஷம்.கேப்டன் அவர்கள் மேல் வைத்த மரியாதைக்கும், அவர் சொன்ன வார்த்தையை காப்பாற்றும் வகையிலும் எந்த நிபந்தனையும் இன்றி உடனே ராகவா லாரன்ஸ் மாஸ்டர் அவர்கள் ஒத்துக் கொண்டது  ,அவரின் பெருந்தன்மையை காட்டுகிறது..மேலும் தயாரிப்பாளர்,  மாஸ்டர் சம்பளம் பற்றி பேசியபோது, எந்த சம்பளமும் எனக்கு வேண்டாம், 4, ஏழ்மை நிலையில் இருக்கும் குடும்பங்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்தால் போதும் என்றார். ராகவா லாரன்ஸ் மாஸ்டர் அவர்களின் இந்த அணுகுமுறை  படை தலைவனுக்கு மேலும் வலு சேர்த்தது போல இருந்தது. இந்த மகிழ்வான செய்தியை , ஊடகங்களுக்கு தெரிய படுத்துவதில், படக் குழுவினர்  பெரும் மகிழ்ச்சி அடைகிறோம் என கூறியுள்ளார்.


படைத்தலைவன் படம்:


 விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் ஏற்கனவே சகாப்தம், மதுரை வீரன், தமிழன் என்று  சொல், உள்ளிட்ட படங்களில் நடித்தவர்.ஆனால், இவர் படங்கள் மிகப்பெரிய அளவில் பேசப்படவில்லை. விஜயகாந்தின் இறப்பிற்குப் பின் இவருக்கு பட வாய்ப்புகள் வரத் தொடங்கியுள்ளன. கேப்டன் மீது உள்ள மரியாதையின் காரணமாக, பல நடிகர்கள் இவருக்கு உதவி செய்ய ஆரம்பித்து வருகின்றனர்.


VJ கம்பைன்ஸ் ஜெகநாதன் பரமசிவம் மற்றும் சுமீத் ஆர்ட்ஸ் சுமீத் சாய்கல் இணைந்து வழங்க, Directors Cinemas தயாரிப்பில் படைத்தலைவன் படத்தில் சண்முக பாண்டியன்  நாயகனாக நடித்துள்ளார். u.அன்பு இயக்கிய இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.


ஆக்ஷன் கலந்த காட்டு யானைகளின் பின்னணியில் இப்படம் உருவாகியுள்ளதாம். இப்படத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் க்ளிம்ஸ் வீடியோ  விஜயகாந்த் பிறந்தநாள் அன்று ரிலீஸ் செய்யப்பட்டது. இது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று பிரபலமாக பேசப்பட்டு வருகிறது.  இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது முடிவடைந்துள்ள நிலையில், இப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

நான் பிடிவாதக்காரன் கிடையாது...பதவி மீது ஆசை எதுவும் இல்லை: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!

news

மோடியால் முடியாததை நான் சாதித்ததால் எடப்பாடி பழனிச்சாமிக்கு வயிற்றெரிச்சல்: முதல்வர் முக ஸ்டாலின்

news

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி.. ஒரு புகாரும் வரவில்லை.. தேர்தல் ஆணையம்

news

தமிழ் வளர்ச்சியில் பெண் கவிஞர்களின் பங்கு!

news

ஹலோ மக்களே.. தீபாவளிக்கு சொந்த ஊர் போறீங்களா?.. இதை தெரிஞ்சுக்க மறந்துடாதீங்க!

news

திருவண்ணாமலைக்கு திடீரென போன லோகேஷ் கனகராஜ்.. கூலி வெற்றிக்காக பிரார்த்தனை!

news

32வது பிறந்த நாளை கொண்டாடும் ஹன்சிகா மோத்வானி.. போராட்டங்களே வாழ்க்கை!

news

புதிய வருமான வரி மசோதா 2025.. திங்கள்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கலாகிறது

news

டிரம்ப் போட்ட 50% வரியால் பாதிப்பு.. இந்திய ஜவுளி ஏற்றுமதித் துறைக்கு ரூ 87,000 கோடி இழப்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்