சென்னை: சீரியல் நடிகர் மிர்ச்சி செந்திலிடம் ஒரு பிராடு நபர், போலியான வாட்ஸ் ஆப் செய்தி மூலம் ரூ. 15,000 பணத்தை ஆட்டையைப் போட்டுள்ளார்.
இது டிஜிட்டல் யுகம். எனவே மோசடிகளும் கூட டிஜிட்டல் மயமாகி விட்டது. விதம் விதமாக தினுசு தினுசாக ஏமாற்றுகிறார்கள். இதில் படிக்காதவர்கள்தான் என்று இல்லாமல் படித்தவர்களும், விவரமானவர்களும் கூடத்தான் நிறைய ஏமாந்து போகிறார்கள். இப்படி நூதனமாக ஏமாந்தவர்கள் லிஸ்ட்டில் நடிகர் செந்திலும் லேட்டஸ்டாக இணைந்துள்ளார்.
விஜய் டிவி மூலம் பிரபலமானவர் மிர்ச்சி செந்தில். சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்து பிரபலமான மிர்ச்சி செந்தில் மேலும் சில சீரியல்களிலும் நடித்து ஃபேமஸானர். பெரிய திரையிலும் தவமாய் தவமிருந்து, வெண்ணிலா வீடு என்று சில படங்களில் நடித்தும் இருக்கிறார்.

இவருக்கு கோயமுத்தூரைச் சேர்ந்த நண்பரான ஒரு ஓட்டல் தொழிலதிபர் ஒருவரிடம் இருந்து குறுஞ்செய்தி வாட்ஸ் அப்பில் வந்து இருக்கிறது. அதில் தனக்கு 15,000 பணம் அனுப்ப முடியுமா அந்த மெசேஜில் கேட்கப்பட்டுள்ளது. மிகவும் நெருங்கிய நண்பராச்சே என்று நினைத்த செந்தில், கொஞ்சமும் யோசிக்காமல், உடனே அவரிடம் ஜி பே நம்பர் வாங்கி பணத்தை அனுப்பியிருக்கிறார்.
பணம் போன பிறகுதான் பெயர் தேவேந்தர் என்று வந்துள்ளது. இதையடுத்து ஷாக்கான அவர் அய்யயோ இது ஸ்கேம் போலத் தெரிகிறதே என்று பயந்து, சம்பந்தப்பட்ட கோவைக்காரருக்கு போன் செய்து கிராஸ் செக் செய்திருக்கிறார். அப்போதுதான் தெரிந்திருக்கிறது, தான் 15,000 ஏமாந்திருக்கிறோம் என்று.
ஆன்லைன் ஸ்கேமில் இப்படி புதுசாக பணம் ஏமாற்ற ஏமாற்றுகிறார்கள். மக்களே கவனமா இருங்க என்று கூறி தான் ஏமாந்த கதையை இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்து... இனி மக்கள் யாரும் இப்படி ஏமாறாதீர்கள், உஷாராக இருங்கள் என்று கூறியுள்ளார் மிர்ச்சி செந்தில்.
சிரிங்க சிரிங்க.. நல்லா சிரிங்க.. Laughter is the best medicine!
அக்னி சிறகுகள்.. சிந்தனைக்கு தீப்பொறி கொடுத்த வாழ்க்கை வரலாறு
வெற்றியின் ஒளி!
உலகையே திரும்பி பார்க்க வைத்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்
உணவும் , வளமும், வாழ்வாதாரமும்.. பின்னே மக்காச்சோளமும்!
இதயத்தை செதுக்கி.. தடுமாறாமல் வழிகாட்டி.. A Teacher Is More Than a Teacher
தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் 2ம் ஆண்டு நினைவு தினம்.. நினைவிடத்தில் தலைவர்கள் அஞ்சலி
வனத்துறை நடத்திய ஈர நில பறவைகள் கணக்கெடுப்பு.. ஏன் நடத்துகிறார்கள் தெரியுமா?
CMக்கு முடியவில்லை என்றால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற வேண்டும் என்று சட்டம் போடுவோம்: சீமான்
{{comments.comment}}