குவியும் பாலியல் புகார்கள்.. மோகன்லால் உள்ளிட்ட.. மலையாள நடிகர் சங்க நிர்வாகிகள்.. கூண்டோடு விலகல்

Aug 27, 2024,06:50 PM IST

கொச்சி: மலையாளத் திரையுலைகில் தொடர்ந்து பாலியல் புகார்கள் எழுந்து வரும் நிலையில் நடிகர் மோகன்லால் நடிகர் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

மலையாள சினிமாவில் பெண்களுக்கு எதிராக  பாலியல் வன்கொடுமைகள்  குறித்து நீதிபதி ஹேமா தலைமையில் கமிஷன் அமைக்கப்பட்டது.  இந்த கமிட்டி, மொத்தம் 235 பக்கங்கள் கொண்ட அறிக்கையை மாநில அரசிடம் சமர்ப்பித்தது. அந்த அறிக்கையை சமீபத்தில் கேரள அரசு வெளியிட்டது. 

அதில் மலையாளத் திரையுலகில் பெண்கள் இழிவாக நடத்தப்படுவதாகவும், பாலியல் சீண்டல்களுக்கு உள்ளாவதாகவும், அடிப்படை வசதிகள் கூட செய்து தரப்படுவதில்லை என்றும் சரமாரியான புகார்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன. இந்த அறிக்கை மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.



இதையடுத்து பல்வேறு நடிகைகள் நடிகர்கள், இயக்குநர்கள் மீது சரமாரியாக பாலியல் புகார்களைக் கூற ஆரம்பித்தனர். நடிகர் சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளர் எடவேலா பாபு அநாகரிகமாக நடந்து கொண்டதாக நடிகை மினு முந்நீர் வெளிப்படையாக கூறியிருந்தார். அதைப்போல், மேற்கு வங்க நடிகை ஸ்ரீலேகா மித்திரா சினிமா அகாடமி தலைவர் ரஞ்சித் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக கூறினார். இவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் ரஞ்சித் தன்னுடைய அகாடமி தலைமை பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து ரேவதி சம்பத், நடிகரும், நடிகர் சங்க பொதுச் செயலாளருமான சித்திக் மீது பாலியல் புகார்களை தெரிவித்து வந்தார். நடிகர் ரியாஸ் மீதும் இவர் புகார் கூறியிரு்நதார். இதன் காரனமாக நடிகர் சங்க பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நடிகர் சித்திக் தனது பதவியை ராஜினாமா செய்தார்.   மலையாளத் திரை உலகில் தொடர்ந்து நடிகைகள் பாலியல் புகார் தெரிவித்து வரும் நிலையில் மலையாள திரை உலகில் பெரும் பரபரப்பையும் சலசலப்பையும் ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் மலையாள நடிகர் சங்க தலைவரும், நடிகருமான மோகன்லால் நடிகர் சங்கத் தலைவர் பதவியில் இருந்து இன்று ராஜினாமா செய்தார். அதேபோல் அம்மா-வின் நிர்வாகிகள் அனைவரும் மொத்தமாக ராஜினாமா செய்து விட்டனர். அம்மா செயற்குழு முற்றிலும் கலைக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு

news

நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!

news

சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?

news

எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!

news

TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?

news

லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!

news

Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி

news

எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!

news

முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!

அதிகம் பார்க்கும் செய்திகள்