அம்மாதான் பெஸ்ட்.. எல்லோரும் பதில் சொல்லணும்.. நான் எங்கேயும் ஓடலை.. மோகன்லால் ஆவேசம்!

Aug 31, 2024,05:53 PM IST

திருவனந்தபுரம்: இந்தியாவிலேயே சிறந்த நடிகர் சங்கம் அம்மா சங்கம்தான். அந்த சங்கத்தை அழித்து விடக் கூடாது. எல்லோருக்கும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லும் பொறுப்பு உள்ளது. மலையாள திரையுலகம் பாலிவுட் போன்று பிரமாண்டமானது அல்ல, கஷ்டப்பட்டு முன்னேறி வந்துள்ளது. நான் எங்கேயும் ஓடி ஒளியவில்லை. கேரளாவில் தான் இருக்கிறேன் என்று நடிகர் மேகன்லால் தெரிவித்துள்ளார்.


சமீபத்தில் கேரளாவில்  வெளியிடப்பட்ட ஹேமா கமிட்டி அறிக்கையால் கேரளாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 2017ம் ஆண்டில் மலையாள நடிகை பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட வழக்கில் கேரள அரசால் அமைக்கப்பட்டது தான் ஹேமா தலைமையிலான குழு. இந்த குழுவின் அறிக்கை கடந்த வாரம் வெளியானது.  அதில் மலையாள திரையுலகில்  பணிபுரியும் பெண்கள் பலரும்  அடுக்கவுக்கான பாலியல் குற்றச்சாட்டுகுளை முன்வைத்தனர். இதன் காரணமாக மலையாள நடிகர் சங்கம் 'அம்மா' கலைக்கப்பட்டது. நடிகர் சங்க தலைவாக இருந்த மோகன்லால் உட்பட 17 நிர்வாகிகளும் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.




அதன்பின்னர் அமைதி காத்து வந்த நடிகர் மோகன்லால், இன்று திருவனந்தபுரத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் அதிரடியாக பேசினார். அவர் கூறுகையில், உங்களது எந்தக் கேள்விக்கும் என்னிடம் பதில் இல்லை. அம்மா அமைப்பில் இரண்டு முறை நான் தலைவராக இருந்தேன். குழு கலைக்கப்பட்டாலும் சங்க செயல்பாடு தடைப்படவில்லை. 


பாலியல் குற்றச்சாட்டு சர்ச்சைகளுக்கு ஒட்டுமொத்த கேரளா திரையுலகம் பதில் சொல்லும். அந்தப் பொறுப்பு அனைவருக்கும் உள்ளது. மலையாள திரையுலகம் பாதிக்கப்படக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். சாட்சியங்களுடன் புகார் அளிக்கும் பட்சத்தில் சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சனைக்கு  அம்மா அமைப்பை மட்டும் குறை சொல்வதில் நியாயம் இல்லை. பாலியல் புகாரால் மலையாளத் திரையுலகில் உள்ள கடைநிலை ஊழியர்கள் பாதிக்கப்படக்கூடாது.  திரைப்பட நடிகர் சங்கம் ஆனா அம்மா  சங்கம் மீது அவதூறு பரப்ப வேண்டாம். வயநாடு போன்ற பேரிடர்களின் போது தொடர்ந்து மக்களுக்கு அம்மா சங்கம் பல உதவிகளை செய்துள்ளது. ஒரே விஷயத்தை மீண்டும் மீண்டும் பேச வேண்டாம்.


மலையாள திரையுலகம் பாலிவுட் போன்று பிரமாண்டமானது அல்ல, கஷ்டப்பட்டு முன்னேறி வந்துள்ளது. இந்தியாவிலேயே சிறந்த நடிகர் சங்கம், அம்மா சங்கம்தான். அது அழிந்து விடக் கூடாது. நான் எங்கேயும் ஓடி ஒளியவில்லை. கேரளாவில் தான் இருக்கிறேன்.பாலியல் புகார் தொடர்பாக நீதிமன்றமும், அரசும் தங்கள் கடமைகளை செய்து வருகின்றன. நீதிமன்றத்தில் உள்ள பிரச்சனை தொடர்பாக நான் எப்படி பேச முடியும் என செய்தியாளர்களிடம் தெரிவித்தார் மோகன்லால்.


பேட்டி முழுவதும் படபடப்பாக காணப்பட்டார் மோகன்லால். செய்தியாளர்களின் கேள்விகளுக்கும் அவர் ஆவேசமாக பதிலளித்தார். ஹேமா கமிட்டி அறிக்கையால் ஏற்பட்டுள்ள பிரளயம் எப்போது அடங்கும் என்று தெரியவில்லை. மறுபக்கம், இன்னொரு சூப்பர் ஸ்டாரான மம்முட்டி இதுவரை இதுகுறித்து எந்தக் கருத்தும் தெரிவிக்காமல் உள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்