சென்னை: 90களில் நடிகராகவும் பின்னர் அரசியல்வாதியாகவும் திகழ்ந்த நடிகர் நெப்போலியனின் மூத்த மகன் தனுஷ் மற்றும் அக்ஷயாவுக்கு இன்று ஜப்பானில் திருமணம் சிறப்பாக நடைபெற்றது. இதில் தமிழ் சினிமாவை சேர்ந்த பல்வேறு திரை நட்சத்திரங்கள் நேரில் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
90களில் தமிழ் சினிமாவில் பல்வேறு நடிகர், நடிகைகள் தனக்கென்று தனி ஸ்டைலில் நடித்து மக்களிடையே பாராட்டுகளை பெற்று பிரபலமானவர்கள் பலர். அதில் ஒருவர்தான் நெப்போலியன். இவர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான புது நெல்லு புது நாத்து படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து 90களில் பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.

எட்டுப்பட்டி ராசா பாடல் மூலம் கிராமத்து ரசிகர்களை தன் வசப்படுத்தியவர். அதுமட்டுமல்லாமல் இப்பாடலுக்காக பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார். 70-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஒரு நடிகனாக, பாடகனாக மட்டுமல்லாமல் ஒரு அரசியல்வாதியாகவும் களமிறங்கி திமுக சார்பில் போட்டியிட்டு மத்திய அமைச்சராகவும் பதவி வகித்து வந்தவர். நெப்போலியன் மற்றும் ஜெயசுதா தம்பதிகளுக்கு தனுஷ் மற்றும் குணால் ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர்.
நெப்போலியன் மகன் தனுஷிற்கு தசை தளர்வு நோய் காரணமாக அமெரிக்காவுக்கு சிகிச்சைக்காக சென்ற நெப்போலியன் அமெரிக்காவிலேயே குடும்பத்துடன் செட்டில் ஆகிவிட்டார். இந்த நிலையில், தனுஷிற்கு திருமணம் செய்ய முடிவு செய்து, திருநெல்வேலியை சேர்ந்த அக்ஷயா என்ற பெண்ணுடன், நிச்சயதார்த்தம் நடந்தது. இதுதொடர்பாந புகைப்படம் மற்றும் திருமண அழைப்பிதழ்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டிருந்தார் நெப்போலியன். இதற்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
தொடர்ந்து திருமணத்தை ஜப்பானில் நடத்த தீர்மானித்து அதுதொடர்பான அப்டேட்டுக்களையும் போட்டு வந்தார் நெப்போலியன். இது பெரும் ஆர்வத்தையும், எதிர்பார்ப்புகளையும் தூண்டி விட்டிருந்தது. இந்த நிலையில் தனுஷ்_அக்ஷயாவின் திருமணம் இன்று ஜப்பானில் நடைபெற்றது. இந்திய நேரப்படி இன்று காலை 8.10 மணி அளவில் திருமணம் சிறப்பாக முடிந்தது.

திருமண விழாவில், நடிகர் சரத்குமார், ராதிகா சரத்குமார், சுஹாசினி, குஷ்பூ, மீனா, நடிகர் கார்த்தி அவரது மனைவி ரஞ்சனி, நடிகர் பாண்டியராஜன், அவரது மனைவி, நடிகர் விதார்த், முன்னாள் டிஜிபி ரவி, கலா மாஸ்டர், வசந்த பவன் ரவி உள்ளிட்ட பல திரைப்படங்கள் கலந்து கொண்டனர். அதேபோல் ஜப்பான் நாட்டின் இந்திய தூதர் சிபி ஜார்ஜ், அவரது மனைவி ஜாய்ஸ் ஜார்ஜ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
நடிகர் சிவ கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் வீடியோ மூலம் வாழ்த்து செய்தி அனுப்பியிருந்தனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
நவ., 29ம் தேதி சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்... வானிலை மையம் தகவல்!
சமூகநீதி வழங்குவதில் பட்டியலின மக்களுக்கும் திமுக அரசு துரோகம்: அன்புமணி ராமதாஸ்!
INS Mahe.. இந்தியாவின் சைலென்ட் ஹண்டர் மும்பையில் களமிறங்கியது!
அதிர வைத்த தேஜஸ் போர் விமான விபத்து.. நடந்த தவறு என்ன.. தீவிரமாக ஆராயும் நிபுணர்கள்
கருப்பு வெள்ளை இந்திப் படங்களின் ஸ்டைலிஷான நாயகன்.. மறக்க முடியாத தர்மேந்திரா
மும்பை மாநகராட்சி வாக்காளர் பட்டியலில் திடுக்.. 11 லட்சம் இரட்டை வாக்காளர்கள் கண்டுபிடிப்பு!
பாலிவுட்டின் பழம்பெரும் நடிகர் தர்மேந்திரா காலமானார்.. மும்பையில் உயிர் பிரிந்தது
சென்னையில்.. தக்காளி விக்கிற விலைக்கு.. சட்னி அரைக்க முடியாது போலயே.. கிலோ ரூ. 80!
ரஜினிகாந்த்தை திருப்திப்படுத்தப் போவது யார்.. தலைவர் 173 எதிர்காலம் என்னாகும்?
{{comments.comment}}