- தமிழ்ச்செல்வி
படைப்புகள் யாவும் மிக எளிதில் உருவாக்கப்படுவது அல்ல சிந்தனையின் நீட்சியே படைப்பாக உரு கொள்கிறது. ஒரு படைப்பு உருவாக நேரத்தையோ அல்லது பணத்தையோ முதலீடாக கொள்ள வேண்டும். ஒரு மதம் கொண்ட யானை தன்னை சுற்றி இருக்கும் சுற்றுப்புறத்தை அழிக்க மட்டுமே முயல்கிறது. மனதிலே தெளிவு மற்றும் சிறந்த சிந்தனை ஒரு சிறந்த ஆற்றலாக வெளிப்படுகிறது.
இப்போது எல்லாம் மாணவர்கள் சிந்திக்க மறந்து விட்டார்கள். புதிய படைப்புகளை கொடுக்க மறந்து விட்டார்கள். எதற்காக போட்டியிட வேண்டும், எதற்காக நாம் போராட வேண்டும், நாம் இந்த சமூகத்தை எவ்வாறு கட்டமைக்க வேண்டும் என்றெல்லாம் சிந்திக்க மறந்து விட்டார்கள்.
கைகளில் தொலைபேசியும் வலைதளங்களும் தங்கள் நேரத்தை திருடுவதை மறந்து விட்டார்கள். எங்கே எழுவது எங்கே மீள்வது என்று தெரியாமல் அல்லாடி கொண்டிருக்கிறார்கள். இந்த சமூக கட்டமைப்பில் வாழும் ஒவ்வொரு தரும் வெற்றி எனும் களத்தினை காண வந்திருக்கிறார்கள். அதற்கான திறவுகோலை தேடி வந்திருக்கிறார்கள்.

அவர்களை வழிநடத்தும் பொறுப்பினை எவ்வாறு செய்யப் போகிறோம். ஒழுக்கத்தையும் பண்பையும் எவ்வாறு சொல்லிக் கொடுக்கப் போகிறோம். தடம் மாறிச் செல்லும் தடாகத்தில் செல்லும் நீர் போல கூட்ட நெரிசலில் கலைந்து செல்லும் காற்றாக போகிற போக்கில் எல்லாம் வாழ்வதில்லை வாழ்க்கை என்று உணர்த்த வேண்டும் இன்றைய தலைமுறைக்கு.
(தமிழ்ச்செல்வி, பட்டதாரி ஆசிரியர், அ.உ. பள்ளி, அங்கு செட்டிபாளையம், பண்ருட்டி, கடலூர் மாவட்டம்)
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
எழுத்தறிவித்த இறைவர்களுக்கு நன்றி பகரும் நன்னாள் இந்நாள்!
இடர்பாடுகள்
ஆசிரியர் எனும் அகல்விளக்கு!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
“Teaching: A Gift from God”
தாணுமாலயன் (இயற்கையை போதிக்கும் ஆசான்)
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
{{comments.comment}}