- பாரதிராஜன்
பிரசாத் கல்லூரியில் படிக்கும் போது எல்லாரையும் போல் நிறைய கனவு கண்டான். படிப்பில் படு சுட்டி.
கதை, கவிதை மற்றும் கட்டுரைப் போட்டிகளில் நிறைய பரிசுகள் வாங்குவான். கல்லூரியில் நடைபெறும் அனைத்துப்போட்டி மற்றும் இதர கல்லூரியில் நடைபெறும் போட்டிகளில் அவன் படிக்கும் கல்லூரி சார்பாக கலந்து கொண்டு கல்லூரிக்குப் பெருமை சேர்த்தவன்.
பிரசாத்தின் தந்தை நேர்மையான அரசு ஊழியர். அவர் வேலை செய்யும் அலுவலகத்தில் கையூட்டு இல்லாமல் எந்த வேலையும் நடைபெறாது.
பிரசாத் கல்லூரியில் படித்த காலத்தில் கன்னியாகுமரியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டிய போது அவன் தந்தை மகன் கேட்ட தொகை ரூபாய் 2,500/_ இல்லை என்று சொன்னார்.
பிரசாத்தின் நண்பன் சிவராஜ், சிவராஜின் தந்தையும், பிரசாத்தின் தந்தையும் ஒரே அலுவலகத்தில் வேலை செய்கிறார்கள். இதில் சிவராஜின் தந்தை கையூட்டு வாங்காமல் எந்த வேலையும் செய்ய மாட்டார்.
சிவராஜ் கன்னியாகுமரி செல்ல, அவன்கேட்ட தொகை மற்றும் கைச்செலவுக்கென்று ரூ.3,000/_கொடுத்து அனுப்பினார். சிவராஜ் பிரசாத்தை அந்த நிகழ்வுக்கு தன்தந்தை கொடுத்த ரூபாயில் கூட வருமாறு அழைக்க,பிரசாத் மறுத்துவிட்டான்.
கன்னியாகுமரி சென்ற கல்லூரி மாணவர்கள் நிகழ்ச்சி முடிந்ததும், கடலில் குளிக்க சென்றதில் கடல்அலையில் சிக்கி அதில் சிவராஜ் அலையில் சிக்கி, படுகாயப்பட்டான்.

அதன்பிறகு சென்னைக்கு திரும்ப வந்து இரண்டு மாதம் கல்லூரி போக முடியாத நிலை. பிரசாத் தன் நண்பன் நிலைக்கண்டு ரொம்ப வருத்தப்பட்டான். பிரசாத் வழக்கறிஞராக ஆசைப்பட்டு அதற்கான முயற்சிகளில் இறங்கினான். பிரசாத்தின் தந்தை தன்மகன் மாவட்ட ஆட்சியராக பணிபுரிய விரும்பி அதற்கேற்ற வகுப்பில் சேர்த்து பிரசாத் ஐ.ஏ.எஸ் ஆனான். பிரசாத்தின் கனவு நிறைவேறாமல் ,அவன் தந்தைக்காக வீட்டுக்கொடுத்தான் பிரசாத்.
(எழுத்தாளர் பாரதிராஜனின் இயற்பெயர் ரங்கராஜன் , பாரதியார் பாடல்கள் மேல் உள்ள காதலால் பாரதிராஜன் என்கிற புனைப்பெயரில் கதை கட்டுரை மற்றும் கவிதை எழுதி வருகிறார். சென்னை அம்பத்தூரில் வசித்து வருகிறார்)
தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்படுவது கட்டாயம்.. சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்
சட்டசபையில் கலகல.. முதல்வர் விஜய்யை குலுங்கிக் குலுங்கி சிரிக்க வைத்த எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்!
தமிழ்த்தாய் வாழ்த்தை கடைசியில் பாட வற்புறுத்தவில்லை - கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்
தமிழக அரசின் மாநிலக் குழுவில் அர்ச்சனா கல்பாத்தி, பாடகர் வேல்முருகன் பெயர்கள்
மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள்.. கை, கால்களை சுத்தமாக கழுவ செவிலியர்கள் அறிவுரை!
சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை...வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி
சூப்பர் ஆண்டி.. பொறணி பேசியே 2 வீடு வாங்கி செட்டிலான கொலம்பியா மிரியம்!
நோட்டிஃபிகேஷன் மனிதர்கள் – போன் வைப்ரேட் ஆனா மட்டும் போதாது மச்சா!
மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்து என்று மத்திய அரசு சொல்லவே இல்லை.. டாக்டர் தமிழிசை செளந்தரராஜன்
{{comments.comment}}