லண்டன்: பிரிட்டன் அரசியல் சமீபகாலமாக ஒரு நிலையற்ற தன்மையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்பது உலகறிந்த உண்மை. இந்நிலையில், தற்போதைய பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மரும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாகவே, பிரிட்டன் பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லமான 10 டவுனிங் ஸ்ட்ரீட் ஒரு சுழலும் கதவாக மாறிவிட்டது போன்ற தோற்றம் ஏற்பட்டுள்ளது. அதாவது, அங்கு வரும் பிரதமர்கள் யாரும் தங்களது முழு பதவிக்காலத்தையும் நிறைவு செய்ய முடியாமல், அடுத்தடுத்து பதவி விலகும் ஒரு விசித்திரமான அரசியல் கலாச்சாரம் பிரிட்டனில் தொடர்கிறது.
கடந்த சில ஆண்டுகளின் பிரிட்டன் அரசியல் வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால், இந்த நிலையற்ற தன்மை மிகத் தெளிவாகப் புரியும்.
தெரசா மே மற்றும் டேவிட் கேமரூன் ஆகியோர் பிரெக்ஸிட் (Brexit) விவகாரம் மற்றும் உள்நாட்டு அரசியல் குழப்பங்களால் பதவிக்காலத்தை முழுமையாக முடிக்காமல் விலகினார்கள்.

போரிஸ் ஜான்சன் பெரும் ஆதரவோடு ஆட்சிக்கு வந்தாலும், பார்ட்டிகேட் உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி, சொந்தக் கட்சியினரின் அழுத்தத்தால் அவர் பதவி விலக வேண்டியதாயிற்று.
லிஸ் ட்ரஸ் பிரிட்டன் வரலாற்றிலேயே மிகக் குறைந்த நாட்களே (வெறும் 45 நாட்கள்) பிரதமராக இருந்தவர் என்ற வரலாற்றுப் பிழையோடு, தவறான பொருளாதாரக் கொள்கைகளால் இவர் பதவியிழந்தார்.
ரிஷி சுனக் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இவர், பொருளாதாரத்தைச் சீரமைக்க முயன்ற போதிலும், பொதுத்தேர்தலில் அவரது கன்சர்வேடிவ் கட்சி சந்தித்த வரலாற்றுச் சிறப்புமிக்க தோல்வியால் பதவியை இழக்க நேரிட்டது.
இந்த நிலையில்தான் தற்போதைய பிரதமர் கீர் ஸ்டார்மரும் விலகியுள்ளார். பழமைவாதக் கட்சியின் நீண்டகால ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, தொழிலாளர் கட்சி சார்பில் பெரும் எதிர்பார்ப்புகளுடன் கீர் ஸ்டார்மர் பிரதமராகப் பொறுப்பேற்றார். ஆனால், ஆட்சிக்கு வந்த குறுகிய காலத்திலேயே அவருக்கும் பல்வேறு சவால்கள் முளைக்கத் தொடங்கின.
பிரிட்டனின் தற்போதைய பொருளாதாரச் சூழல், பணவீக்கம் மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு ஆகியவை மக்களுக்குப் பெரும் சுமையாக மாறியுள்ளன. இதற்கு உடனடித் தீர்வு காண வேண்டிய கட்டாயத்தில் ஸ்டார்மர் அரசு இருந்தது. அதில் தோல்வி அடைந்ததாலும் அழுத்தம் அதிகரித்த காரணத்தாலும், தற்போது ஸ்டார்மர் பதவி விலகியுள்ளார்.
Cute Short Story: டீ தட்டை!
சொற்களில் தட்டிப் பதறும்.. சுடிதாரின் விளிம்புகள்!
புராணங்கள் நிறைந்தது பண்டைய பாரதம்... விரோதங்கள் நிறைந்தது இடைக்கால பாரதம்!
Short Story: காசேதான் கடவுளடா!
சிவபெருமானின் காலை தன் தலையில் தாங்கி தீட்சை பெற்ற திருநாவுக்கரசர்!
கடவுளோடு கைகுலுக்கு இந்திரனிடம் ஏதாவது கேள்
Happay Independence Day: 80 ஆண்டுகள் தொட்டு விட்டோம்.. எழுச்சி எண்ணம் தொடர்ந்திட்டோம்!
சுதந்திர தினம்.. அச்சத்தை மடமையாக்கி அறவழியில் வாழ்ந்தவனே !
அன்னையைப் போற்று
{{comments.comment}}