FIFA WorldCup 2026: உலகக் கோப்பை கால்பந்து.. அமெரிக்காவில் அசத்தும் ஈரான்.. டிரம்பை கலாய்த்து மீம்ஸ்

Jun 22, 2026,05:13 PM IST

வாஷிங்டன்: 2026 பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ரசிகர்களின் கவனத்தை கோல்கள் மட்டுமல்ல, மீம்ஸ்களும் திருடி வருகின்றன. குறிப்பாக ஈரான் அணியின் வெற்றி நடையை வைத்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை கலாய்த்து வருகின்றனர் அமெரிக்கர்கள்.


அமெரிக்க மண்ணில் விளையாடும் ஈரான் அணி இதுவரை ஒரு போட்டியிலும் தோல்வியைச் சந்திக்காமல் கம்பீரமாக வலம் வருவதுதான் தற்போது இணைய உலகின் ஹாட் டாபிக்.


முதலில் நியூசிலாந்துடன் 2-2 என சமநிலை, அடுத்து பெல்ஜியத்துடன் கோல் இல்லா டிரா. "அட.. தோற்கவே மாட்டாங்களா?" என்று ரசிகர்கள் ஆச்சரியப்படும் அளவுக்கு ஈரான் அமைதியாக புள்ளிகளை சேகரித்து வருகிறது.


இதையடுத்து சமூக வலைதளங்களில் மீம் கிரியேட்டர்களுக்கு செம விருந்து கிடைத்துவிட்டது. "அமெரிக்காவில் எல்லாரும் வெற்றி பெறலாம்... ஆனால் ஈரானை மட்டும் யாராலும் தோற்கடிக்க முடியவில்லை!" என்ற வசனத்துடன் டொனால்ட் டிரம்பை கலாய்க்கும் மீம்ஸ்கள் மழையாக பொழிந்து வருகின்றன.




அரசியல் பதற்றம், பயணக் கட்டுப்பாடுகள், தொடர்ச்சியான இடமாற்றம் என பல சவால்களை சந்தித்தாலும், ஈரான் வீரர்கள் முகத்தில் பதற்றம் காட்டாமல் மைதானத்தில் பந்தை மட்டும் பேச வைத்து வருகின்றனர்.


"எங்களை விமானத்தில் அலைய வைத்தாலும் பரவாயில்லை... புள்ளிகளை மட்டும் விட்டுக் கொடுக்க மாட்டோம்!" என்று ஈரான் அணி அமைதியாக பதில் சொல்வது போலவே ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.


இப்போது அனைவரின் பார்வையும் அடுத்த போட்டியின் மீது திரும்பியுள்ளது. இதே வேகத்தில் ஈரான் தொடர்ந்தால், நாக்அவுட் சுற்றிலும் எதிரணிகளுக்கு தலைவலியாக மாறும் என்பதில் ரசிகர்களுக்கு சந்தேகமே இல்லை.


மைதானத்தில் கால்பந்து ஆட்டம் ஒரு பக்கம் நடந்தாலும், இணையத்தில் மீம்ஸ் ஆட்டம் அதைவிட வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறது என்பது மட்டும் உறுதி!

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கல்யாண விருந்து.. பந்தி முதல் டிஜே நடனம் வரை.. பாப்கார்ன் கல்யாணமும்... பாரதிராஜா ஹீரோயினும்!

news

செங்கல்பட்டு, திருப்பூர் தவிர... செப் 28 ல் தாய்மாமன் தங்க மோதிர திட்டம் துவக்கம்

news

"எவன் என்ன சொன்னா என்ன?" - 'பத்தா' ஆடியோ விழாவில் அட்லீ சொன்ன குட்டி ஸ்டோரி

news

கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கை

news

பிரம்ம தேவர் சரஸ்வதி தேவியை ஏன் திருமணம் செய்து கொண்டார்?

news

"ஆம்பளைங்கனா ஒஸ்தி, பொம்பளைங்கன்னா மட்டமா..?"

news

short cute Story: ஆடி வரும் ஆடி.. படியிலிருந்து தள்ளுவார்களா?!

news

சிந்தனைச் சிதறல்.. வெற்றியும் தோல்வியும், சோகமும் மகிழ்ச்சியும் ,கோபமும் பொறுமையும்!

news

Short Story : நாளை எண்ணிக்கொண்டிருக்கிறார்!

அதிகம் பார்க்கும் செய்திகள்