லியோனல் மெஸ்ஸியின் உலகக் கோப்பை வேட்டை எப்போது தொடங்குகிறது?

Jun 13, 2026,03:53 PM IST

சென்னை: 2026 உலகக் கோப்பை கால்பந்து திருவிழா மெக்சிகோ, கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் கோலாகலமாகத் தொடங்கியுள்ளது. தற்போது மெக்சிகோவில் போட்டிகள் தொடங்கியுள்ளன.


உலகெங்கிலும் உள்ள கால்பந்து ரசிகர்களின் ஒட்டுமொத்த பார்வையும் தற்போது அர்ஜென்டினா அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸியின் மீதுதான் உள்ளது.


கடந்த 2022-ஆம் ஆண்டு கத்தாரில் நடந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இறுதிப் போட்டியில், பிரான்ஸ் அணியை வீழ்த்தி 36 ஆண்டு கால ஏக்கத்தைத் தீர்த்து வைத்தது அர்ஜென்டினா. நடப்பு சாம்பியன் என்ற அந்தஸ்துடன், கோப்பையைத் தக்கவைத்துக் கொள்ளும் முனைப்பில் இம்முறை அர்ஜென்டினா படை களம் இறங்குகிறது. இது மெஸ்ஸியின் கடைசி உலகக் கோப்பைத் தொடராக இருக்கும் என்பதால் இதன் மீதான எதிர்பார்ப்பு விண்முட்ட உயர்ந்துள்ளது.


சமீபத்தில் ஆபர்ன் நகரில் நடைபெற்ற உலகக் கோப்பைக்கான ஆயத்தப் போட்டியில் அர்ஜென்டினா அணி 3-0 என்ற கோல் கணக்கில் ஐஸ்லாந்தை வீழ்த்தி அசத்தியது. இப்போட்டியின் இரண்டாம் பாதியில் மாற்று ஆட்டக்காரராக களம் புகுந்த மெஸ்ஸி, பெனால்டி வாய்ப்பை கோலாக மாற்றி அசத்தினார். இவருடன் வாலண்டின் பார்கோ மற்றும் தியாகோ அல்மாடா ஆகியோரும் கோல் அடித்தனர். 


முன்னதாக, ஹோண்டுராஸ் அணிக்கு எதிரான நட்புரீதியான ஆட்டத்தின் போது மெஸ்ஸியின் இடது தொடையில் ஏற்பட்ட தசை சோர்வு காரணமாக அவருக்கு ஓய்வளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் முழு உடற்தகுதியுடன் விளையாடத் தயாராகிவிட்டார்.


இம்முறை அர்ஜென்டினா அணி 'ஜே' பிரிவில் அல்ஜீரியா, ஆஸ்திரியா மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளுடன் இடம்பெற்றுள்ளது.


அர்ஜென்டினாவின் முதல் போட்டி ஜூன் 17ம் தேத கன்சாஸ் சிட்டியில் நடைபெறவுள்ளது. அல்ஜீரியாவை எதிர்த்து அது மோதவுள்ளது. அடுத்த போட்டி ஆஸ்திரியாவுடன் 22ம் தேதி நடைபெறும். ஜோர்டான்- அர்ஜென்டினா போட்டி 28ம் தேதி நடைபெறவுள்ளது. கடைசி இரு போட்டிகளும் ஆர்லிங்டன் நகரில் நடைபெறும்.


அர்ஜென்டினா அணி வீரர்கள் விவரம்:


கோல்கீப்பர்கள்: எமிலியானோ மார்டினெஸ், ஜெரோனிமோ ருல்லி, ஜுவான் முஸ்ஸோ.


தடுப்பாட்ட வீரர்கள்: கோன்சலோ மான்டைல், நஹுவேல் மோலினா, லிசாண்ட்ரோ மார்டினெஸ், நிக்கோலஸ் ஓட்டமெண்டி, மார்கோஸ் செனேசி, கிறிஸ்டியன் ரொமேரோ, ஃபகுண்டோ மதினா, நிக்கோலஸ் தாக்லியாஃபிகோ.


நடுகள வீரர்கள்: லியாண்ட்ரோ பரேடெஸ், ரோட்ரிகோ டி பால், எசெக்கியல் பலாசியோஸ், என்ஸோ பெர்னாண்டஸ், அலெக்சிஸ் மேக் அலிஸ்டர், ஜியோவானி லோ செல்சோ, வாலண்டின் பார்கோ.


முன்கள வீரர்கள்: லியோனல் மெஸ்ஸி, நிக்கோலஸ் பாஸ், தியாகோ அல்மாடா.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தொகுதி மறுவரையறை.. அனைத்துக் கட்சி எம்.பிக்கள் கூட்டத்திற்கு முதல்வர் விஜய் அழைப்பு!

news

Double Meaning talks: மனிதர்கள் எப்போது டபுள் மீனிங் + கெட்ட வார்த்தையில் பேச ஆரம்பிக்கிறார்கள்?

news

தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2026 : அறிவிக்கப்பட்ட திட்டங்களும், ஒதுக்கப்பட்ட நிதியும்

news

தமிழக வேளாண் பட்ஜெட் விவசாயிகள் ஏமாற்றம்...எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

news

புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையனுடன் அதிமுக அதிருப்தி எம்எல்ஏ.,க்கள் திடீர் சந்திப்பு

news

பிரதமர் மோடியின் 2026-ஆம் ஆண்டு வெளிநாட்டு பயணச் செலவு: மத்திய அரசு வெளியிட்ட தகவல்!

news

“வெற்றிப் பயணம் தொடரட்டும்!”: அமைச்சர்களுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து!

news

தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2026-27: திமுக, தேமுதிக.,வின் கருத்து என்ன?

news

முருக பக்தியின் மகத்துவம் பேசும் ஆடி கிருத்திகை –காவடி, பால்குடம், பக்தி பேரலை

அதிகம் பார்க்கும் செய்திகள்