- மஞ்சுளா தேவி
சென்னை: தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் உடல் நலம் குறித்து யாரும் மிகைப்படுத்த வேண்டாம் என்று நடிகர் சங்கத் தலைவர் நாசர் கோரிக்கை விடுத்துள்ளார்.
"கேப்டன்" என்று செல்லமாக அழைக்கப்படும் விஜயகாந்த் ஒரு நல்ல நடிகராக மட்டுமல்லாமல் ஒரு சிறந்த அரசியல்வாதியாகவும் கலக்கியவர். நடிகர் சங்கத் தலைவர், தயாரிப்பாளர், அரசியல் தலைவர், மக்கள் சேவகர் என பல முகம் கொண்டு அசத்தியவர் விஜயகாந்த். நடிப்பில் தனக்கென்ற தனித் திறமையை வெளிப்படுத்தி தனி அடையாளத்தை கொண்டவர். 90களில் இவர் நடித்த படங்கள் அனைத்தும் பிளாக்பஸ்டர் படமாகவே இருந்தது. இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
எல்லோருக்கும் பிடித்த எளிமையான மனிதரான விஜயகாந்த் 2005 ஆம் ஆண்டு தேமுதிக கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். சமீப ஆண்டுகளாக விஜயகாந்த் உடல்நிலை அவ்வப்போது சரி இல்லாமல் போனது. இதனால் கட்சியின் பொறுப்பை பிரேமலதா விஜயகாந்த் பார்த்து வருகிறார். விஜயகாந்த் அவ்வப்போது கட்சி அலுவலகத்திற்கு வந்து தொண்டர்களைச் சந்தித்து மகிழ்ந்து வருகிறார்.
இந்த நிலையில், நவம்பர் 18ஆம் தேதி விஜயகாந்த்துக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை அடுத்த நந்தம்பாக்கத்திலுள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதித்தனர். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல் நிலை தொடர்பாக மியாட் மருத்துவமனை தொடர்ந்து அப்டேட் செய்து வருகிறது. அவரது உடல் நிலை குறித்த வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம், அவர் நலமுடன் இருக்கிறார் என்று பிரேமலதா விஜயகாந்த்தும் கூறி வருகிறார்.
மிகைப்படுத்திப் பேசாதீர்கள்.. நாசர் கோரிக்கை
இந்த நிலையில், நடிகர் சங்கத் தலைவர் நாசர், ஆர்.கே செல்வமணி உள்ளிட்ட சங்கப் பிரதிநிதிகள், விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்கு நேரில் சென்று பிரேமலதா விஜயகாந்த்திடம் நலம் விசாரித்தனர். இதுகுறித்து நடிகர் நாசர் கூறுகையில், வணக்கம்.. கேப்டன் நார்மலாகத் தான் இருக்கிறார். நலமாக உள்ளார். எல்லா புலன்களும் நன்கு வேலை செய்கிறது.
கொஞ்ச நாளாக வரும் செய்திகள் அனைத்தும் மிகைப்படுத்தும் செய்திகள் தான். நாங்கள் தலைமை மருத்துவரை பார்த்தோம். விஜயகாந்த் மீண்டும் வருவார் எனக் கூறினார்கள். நான் தயவுசெய்து கேட்டுக்கொள்கிறேன். மிகைப்படுத்தும் செய்திகளை பரப்பாதீர்கள். இரண்டு மாதம் முன்பு எப்படி இருந்தாரோ அதே போல் தான் இப்பொழுதும் இருக்கிறார். எங்கள் கேப்டன் மீண்டும் வருவார். எங்களுடன் உரையாடுவார் எனக் கூறினார்.
என்னை மிரட்டிப் பார்க்கிறீர்களா?.. நாகை கூட்டத்தில்.. முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு விஜய் கேள்வி
நாகை மருந்துவமனைக்கு சென்று விஜய்யை பார்க்க சொல்லுங்கள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழகத்தைத் தலைகுனிய விடமாட்டேன் என்று போலியாக சூளுரைக்கும் முதல்வர் ஸ்டாலின்: நயினார் நாகேந்திரன்
செம்பரம்பாக்கம் குடிநீர் வழங்கும் திட்டம்... முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
திமுக ஆட்சியில்.. திருவாரூர் கருவாடாக காய்ந்து கிடக்கிறது.. தவெக தலைவர் விஜய்
ஈழத்தமிழர்கள் நலம்.. தொண்டர்கள் கொடுத்த வேல்.. சீமானி்ன் ஆயுதங்களை கையில் தூக்கிய விஜய்!
முழுமையான அரசியல்வாதியாக மாறிய விஜய்.. நேரடித் தாக்குதல் பேச்சால் கிளம்பிய பரபரப்பு!
2026ல் 2 கட்சிகளிடையே தான் போட்டியா?.. அதிமுக குறித்துப் பேசாத விஜய்.. மறைமுக அழைப்பா?
திருச்சியில் எம்ஜிஆர்.. நாகையில் அண்ணா.. திராவிட சென்டிமென்டை கையில் எடுக்கும் விஜய்!
{{comments.comment}}