தெகிடி, மேயாத மான் பட நடிகர் .. பிரதீப் கே. விஜயன்.. பூட்டிய வீட்டிலிருந்து..சடலமாக மீட்பு!

Jun 13, 2024,06:11 PM IST

சென்னை:  தெகிடி, மேயாத மான் உள்ளிட்ட ஒரு சில படங்களில் குணச்சித்திர வேடங்களிலும், காமெடி வேடங்களிலும், நடித்த பிரபல  நடிகர்  பிரதீப் கே விஜயன் இறந்த நிலையில், பூட்டிய வீட்டிலிருந்து மீட்கப்பட்டுள்ளார். பூட்டை உடைத்து சடலமாக மீட்கப்பட்டார் பிரதீப் விஜயன். மாரடைப்பு ஏற்பட்டு அவர் இறந்திருக்கலாம் என காவல்துறை தெரிவித்துள்ளனர்.


தமிழ் சினிமாவில் குணச்சித்திர வேடங்களிலும், ஒரு சில படங்களில் வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்தவர் பிரதீப் கே. விஜயன். இவர் தமிழில் தெகிடி, வட்டம், லிஃப்ட், இரும்புத்திரை, மேயாத மான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கிலும் ஒரு சில படங்களில் துணை நடிகராகவும் நடித்துள்ளார்.




45 வயதான பிரதீப் விஜயன் சென்னை பாலவாக்கம் சங்கராபுரம் முதல் தெருவில்  தனியாக வசித்து வந்துள்ளார். இவருக்கு இதுவரை திருமணம் ஆகவில்லை. கடந்த இரண்டு நாட்களாக வீடு பூட்டியே இருந்துள்ளது. அவர் வெளியேயும் வரவில்லை. இதனால் அக்கம் பக்கத்தினர் சந்தேகம் அடைந்தனர். 


இதற்கிடையே அவருடைய நண்பர் பிரபாகரன் கடந்த இரண்டு நாட்களாக தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் பிரதீப் செல்போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த நண்பர் பிரபாகரன் உடனடியாக  காவல்துறைக்கு தகவல் கொடுத்தார். 


இதன் பின்னர் நீலாங்கரை காவல்துறையினர் நண்பர்கள் உதவியுடன் பூட்டிய கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது அவர் பாத்ரூமில் இறந்த நிலையில் கிடந்துள்ளார். இவருக்கு தலையில் பலத்த காயமும் ஏற்பட்டுள்ளது. உடனே அவரை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். 


பிரதீப் விஜயன் குளிக்கும்போது மாரடைப்பு ஏற்பட்டு இறந்திருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். இறந்த பிரதீப் விஜயனுக்கு ஏற்கனவே மயக்கம், படபடப்பு, மூச்சு திணறல் போன்றவை இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

சட்டமன்ற நேரம் வீணடிப்பு...தவெக அரசு மீது எடப்பாடி பழனிசாமி சரமாரி குற்றச்சாட்டு!

news

காஞ்சிபுரம் பட்டு வாங்கித் தாரேன் கட்டு!

news

காதல் மொழி காற்றின் வழி!

news

எல்லாம் கூறினேனே பெண்ணே!

news

உன்னை நினைப்பதையே என் மனம் காதலிக்கிறது...!

news

லண்டனில் அஜித்தின் கார் பந்தயத்தை நேரில் பார்க்கிறாரா முதல்வர் விஜய்? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்

news

அறிவுடையார் எல்லாம் உடையார்.. சர்வதேச எழுத்தறிவு தினம் International Literacy Day 2026!

news

திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான தடை நீட்டிப்பு

news

தவெக கூட்டணியில் பங்கேற்க மாட்டோம்: சிபிஐ(எம்) தலைவர்கள் கே.பாலகிருஷ்ணன், பெ.சண்முகம் அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்