சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் இதயத்திலிருந்து செல்லும் ரத்த நாளத்தில் வீக்கம் ஏற்பட்டிருந்ததே அவரது உடல் நல பாதிப்புக்குக் காரணம் என்றும் தற்போது அது சரி செய்யப்பட்டு ஸ்டென்ட் பொருத்தப்பட்டுள்ளதாக சென்னை அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் நேற்று நள்ளிரவுக்கு மேல் திடீரென அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அவருக்கு வயிற்று வலி என்றும், நெஞ்சு வலி என்றும் பல்வேறு வகையான தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் அவரது உடல் நிலை ஸ்திரமாக இருப்பதாகவும், இன்று அவருக்கு பல்வேறு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், அவர் கண்விழித்து டாக்டர்களுக்கு நன்றி கூறியதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்த பின்னணியில் தற்போது அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் ரஜினியின் உடல் நலம் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: நடிகர் ரஜினிகாந்த் செப்டம்பர் 30ம் தேதி கிரீம்ஸ்ரோடு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது இதயத்திலிருந்து செல்லும் முக்கிய ரத்த நாளத்தில் வீக்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அறுவைச் சிகிச்சை இல்லாமல், டிரான்ஸ்கத்தீட்டர் மூலம் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
மூத்த இருதயவியல் நிபுணர் டாக்டர் சாய் சதீஷ், வீங்கியிருந்த ரத்த நாளத்தில் அதை சரி செய்து விட்டு அங்கு ஸ்டென்ட் பொருத்தினார். ரஜினிகாந்த் நலம் விரும்பிகளுக்கும், அவரது ரசிகர்களுக்கும் நாங்கள் சொல்லும் செய்தியானது, ரஜினிகாந்த்துக்கான சிகிச்சை திட்டமிட்டபடி சிறப்பாக நடந்து முடிந்தது. அவரது உடல் நலம் ஸ்திரமாக உள்ளது, அவர் நலமாக உள்ளார். இன்னும் 2 நாட்களில் ரஜினிகாந்த் வீடு திரும்புவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு... சென்னை வானிலை மையம் அலர்ட்!
ரஜினியை சந்தித்த சிம்ரனின் நெகிழ்ச்சி பதிவு... இணையத்தில் வைரல்!
2026ல் தேர்தலில் திமுகவை விஜய்யால் வீழ்த்த முடியாது: விசிக தலைவர் திருமாவளவன்
வாட்ஸ்ஆப்பில் வந்த இன்விடேஷன்.. பட்டுன்னு திறந்த அரசு ஊழியர்.. பொட்டுன்னு போன ரூ. 2 லட்சம்!
வரலட்சுமியின் மறைவுக்கு கொலைகார திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
இந்தி மொழியை திணிப்பதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
Coffee lovers pl listen.. அதிகாலையில் காபி குடிக்கக் கூடாது.. ஏன் தெரியுமா?
அதிரடி காட்டி வரும் தங்கம் விலை... சவரனுக்கு ரூ.800 உயர்வு... கலக்கத்தில் வாடிக்கையாளர்கள்!
2027 உலகக் கோப்பைத் தொடரில் ரோஹித், விராட் கோலி விளையாட வாய்ப்பு.. குட் நியூஸ்!
{{comments.comment}}