மதுரை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் வாடிவாசலில் இருந்து பாய்ந்து வந்த நடிகர் சூரியின் கருப்பன் காளை யாராலும் அடக்கப்படாமல் வெற்றி பெற்றது.
உலக பிரசித்தி பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த போட்டியை காண உதயநிதியின் மகன் இன்பநிதியும் வந்திருந்தார். முதலில் கோயில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. கோயில் காளைகளுக்கு துணை முதல்வர் பரிசுகளை வழங்கினார்.
10 சுற்றுகளாக நடைபெறும் இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் ஒவ்வொரு சுற்றிலும் 50 வீரர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதுவரை காளைகள் முட்டியதில் 13 பேர் காயம் அடைந்துள்ளனர். மாடுபிடி வீரர்கள் 6 பேரும், மாட்டின் உரிமையாளர்கள் 4 பேரும், பார்வையாளர்கள் 3 பேரும் ஆக மொத்தம் 13 பேர் காயம் அடைந்துள்ளனர்.
இன்று நடைபெறும் போட்டியில் பங்கேற்று வெற்றி பெரும், காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் கார், டிராக்டர், ஆட்டோ, பைக், தங்ககாசு உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்கள் வழங்கப்பட உள்ளது. இதனால் போட்டியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில், சுமார் 1000 காளைகளும், 750 மாடுபிடி வீரர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.
போட்டியில் பங்கேற்க தகுதி பெற்ற காளைகள் ஒவ்வொன்றாக மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் வாடிவசால் வழியாக அவித்துவிடப்பட்டது. நடிகர் சூரியின் காளை கருப்பன் மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவின் காளைகள் களத்தில் அவிழ்த்து விடப்பட்டன. இதில் நடிகர் சூரியின் காளை யாராலும் அடங்கப்படாத காரணத்தினால் வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து அமைச்சர் விஜயபாஸ்கரின் கொம்பன் காளையும் வாடிவாசலில் சிறப்பான ஆட்டத்தை காண்பித்து பரிசை தட்டிச் சென்றது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Weather Update: தமிழகத்தில் வெப்பநிலை படிப்படியாக உயரக்கூடும்: வானிலை மையம் தகவல்!
இஸ்ரேலுக்கு கருணை காட்ட மாட்டோம்.. போர் தொடங்கி விட்டது.. ஈரான் மதத் தலைவர் கமேனி ஆவேசம்!
கீழடி அகழாய்வை நிராகரித்தால் .... முதல் குரலாக அதிமுகவின் குரல் ஒலிக்கும்: ஆர்.பி.உதயகுமார்
வாசக் கருவேப்பிலையே.. எடுத்து எரியாதீங்க.. அப்படியே சாப்பிடுங்க.. ரொம்ப நல்லது!
தொழில்துறை வளரவில்லை.. அமைச்சர் பிடிஆர் பேச்சுக்கு முதல்வரின் பதில் என்ன.. அன்புமணி கேள்வி!
SMART WATER ATM: சென்னையில் கட்டணமில்லா குடிநீர் சேவையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
3ம் நாட்டின் மத்தியஸ்தத்தை எப்போதும் இந்தியா ஏற்காது.. டிரம்ப்பிடம் கூறிய பிரதமர் மோடி
ரயில்வேயில் 6180 டெக்னீஷியன் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு
காலையிலேயே வருமான வரித்துறை அதிரடி.. சீஷெல் ஹோட்டல்களில் ரெய்டு.. சிக்கியது என்ன?
{{comments.comment}}