சென்னை: நடிகர் விஜய் நடிக்கும் 69 வது படத்தை இயக்குனர் ஹெச் வினோத் உறுதி செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக விளங்கும் நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி இரண்டாம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கினார். அப்போது 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தல் தான் தனது இலக்கு. அதுவரை தான் கமிட்டான படங்களில் நடித்து முடித்துவிட்டு முழு நீள அரசியலில் களமிறங்க உள்ளதாக அறிவித்திருந்தார்.

இதனை அடுத்து அக்கட்சியின் வளர்ச்சி பணிகளை தீவிரமாக செய்து வருகிறார். மறுபக்கம் தமிழ்நாடு முழுவதும் பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு சான்றிதழ்களுடன் பரிசுகளை அளித்து வருங்கால இளைஞர்களின் ஆதரவை திரட்டினார். இதனைத் தொடர்ந்து தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு மிகப் பிரமாண்டமாக நடத்த ஏற்பாடுகளையும், கட்சியின் கொடி சின்னம் குறித்த அறிவிப்புகளை வெளியிடவும் தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
இது தொடர்பான அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டார் நடிகர் விஜய். அதில் நான் தற்போது நடித்து வரும் கோட் படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு முழுவதும் முடிந்து, வரும் செப்டம்பர் ஐந்தாம் தேதி ரிலீஸ் செய்ய தயாராக உள்ளது. இதனால் இப்படத்தில் வெளியீட்டிற்க்கு பிறகே கட்சி குறித்த அப்டேட்டுகள் வெளியிடப்படும் எனவும் அறிவித்திருந்தார். மேலும் கோட் படத்தை தொடர்ந்து விஜய் நடிக்கும் 69 வது படத்தை யார் இயக்குவது என்பது தொடர்பான அறிவிப்பு இதுவரை வெளியிடப்படாமல் இருந்தது.
இயக்குனர் எச் வினோத் இயக்கி வெளிவந்த சதுரங்க வேட்டை படம் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென்று அந்தஸ்தை உருவாக்கினார். இதன்பின்னர் அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தின் மூலம் மேலும் பிரபலமானார். தொடர்ந்து அஜித் நடித்த வலிமை படத்தை இயக்கியிருந்தார் எச்.வினோத். இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றிருந்தது.
இந்த நிலையில் நடிகரும் தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜயின் கோட் படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் கடைசி படத்தை யார் இயக்குவது.. அப்படத்தின் கதைக்களம் எப்படி இருக்கும்.. கடைசி படத்தில் விஜய் முழு நேர அரசியல் கதை களத்தில் நடிக்கப் நடிப்பாரா.. இனி இதுபோல் விஜயை திரையில் காண முடியாது.. என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் கேள்விகளாக எழுந்து வந்தது.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நிலையில்,தற்போது விஜயின் கடைசி படமான 69 ஆவது படத்தை இயக்குனர் எச் வினோத் இயக்க உறுதி செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது விஜய் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}