சென்னை: "மிஸ்டர் கனியன், ஹாய் கனியன், நல்லா இரு, வாழ்க நீ " என்று தன் ரசிகர் மன்றத்தின் பொதுச்செயலாளராக உள்ள குமரன் என்பவருக்கு பிறந்த ஆண் குழந்தைக்கு பெயர் சூட்டி கொஞ்சினார் நடிகர் விஜய் சேதுபதி.
மகாராஜா வெற்றியை தொடர்ந்து பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் நடிகர் விஜய் சேதுபதி. மக்கள் செல்வன் என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர். இவரது இயல்பான நடிப்பு, சாதாரணமாக பழகும் குணம் பலரையும் கவர்த்ததால் தனித்தன்மையுடன் திகழ்ந்து வருகிறார். இவரை பார்க்கும் நடிகர்களாக இருந்தாலும் சரி, ரசிகர்களாக இருந்தாலும் சரி பார்த்தவுடன் கட்டிப்பிடித்து ஒரு முத்தம் கொடுத்து அவர்களின் அன்பை எளிதில் பெற்று விடுவார்.

சிறு உதவி செய்தாலும் தற்போது தம்பட்டம் அடிப்பவர்களுக்கு மத்தியில், செய்யும் உதவியை வெளியில் அதிகளவில் காண்பிக்க விரும்பாதவர் நடிகர் விஜய் சேதுபதி. சமீபத்தில் ஒரு இயக்குனர் இறந்து விட்டார். அங்கு போன விஜய் சேதுபதி இயக்குனரின் குழந்தைகளின் படிப்பு செலவிற்கு பணம் கொடுத்து உதவியதுடன் இதை யாரிடம் தெரிவிக்க வேண்டாம் என்றும் தெரிவித்திருந்த நிலையில், இயக்குனரின் குடும்பத்தினர் அது குறித்த செய்தியை தெரிவித்துவிட்டனர். இப்படி பலர் பேர்களுக்கும் வெளியில் தெரியாமல் உதவி செய்து வருபவர் விஜய் சேதுபதி.
பல நல்ல குணநலன்களை தன்னகத்தே பெற்றுள்ள இவர், தன்னுடைய பிசியான படப்பிடிப்புக்கு மத்தியில் அவ்வப்போது தனது ரசிகர்களை சந்தித்தும் வருகிறார்.இந்நிலையில், விஜய் சேதுபதியின் ரசிகர் மன்றத்தின் பொதுச்செயலாளராக உள்ள குமரன் என்பருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அக்குழந்தையை மருத்துவமனைக்கே நேரில் சென்று பார்த்ததுடன், குழந்தையை வாங்கி மார்போடு அனைத்து கனியன் என பெயர் சூட்டியுள்ளார். அத்துடன் குழந்தைக்கு முத்தமிட்டு நல்லா இரு ... வாழ்க நீ என்றும், கையில் ஏந்தியபடி கனியனை கொஞ்சி விளையாடி வாழ்த்தினார். இந்த வீடியோ இணையத்தில் பரவி தற்போது வைரலாகி வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அலர்ட்!
பசி,பட்டினியை போக்கவில்லை... தீபம் ஏற்ற வேண்டும் என கூறுகிறார்கள்: சீமான் ஆவேசம்!
வானுயர் ஜிஎஸ்டிபி வளர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது:முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
மெஸ்ஸியை பார்க்க முடியாமல் ரசிகர்கள் ஆவேசம்... ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மம்தா பானர்ஜி!
திமுக அரசின் துரோகத்திற்கு எதிராக தெருவுக்கு வந்த போராடும் அரசுஊழியர்கள்: அன்புமணி ராமதாஸ் வேதனை!
ஜிடிபி வளர்ச்சியில் தமிழ்நாடு புதிய சாதனை.. பெரிய மாநிலங்களில் நம்பர் 1 நாமதான்!
Flashback 2025.. தென்னிந்தியத் திரையுலகுக்கு பெரும் சோகம் தந்து விடைபெறும் 2025!
சினிமாத் துறையினரை தொடர்ந்து பாதிக்கும் மன அழுத்தம்.. உரிய கவுன்சிலிங் அவசியம்!
Amma's Pride ஆஸ்கர் விருதுக்குப் போட்டியிடும் சென்னையில் உருவான குறும்படம்!
{{comments.comment}}