நடிகர் விவேக் மகளுக்கு சென்னையில் திருமணம்.. தந்தையின் நினைவாக அவர் செய்த சூப்பர் செயல்!

Mar 28, 2024,02:08 PM IST

சென்னை:  நகைச்சுவை நடிகர் விவேக்கின் இரண்டாவது மகள் தேஜஸ்வினிக்கு திருமணம் நடந்தது. திருமணத்தில் கலந்து கொண்ட  விருந்தினர்களுக்கு தந்தையின் நினைவாக மரக்கன்றுகளை வழங்கி அசத்தினார் தேஜஸ்வினி.


தமிழ் திரையுலகில் பிரபலமான நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் நடிகர் விவேக். இவர் கடந்த 2021ம் ஆண்டு கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட மறு நாளே மாரடைப்பால் காலமானார்.  இவரது நகைச்சுவைகளில் சமூக சீர்திருத்த கருத்துக்கள் அதிகம் இருக்கும். தனது நகைச்சுவையால் சிரிக்க வைத்ததுடன் மக்களை சிந்திக்கவும் வைத்தவர். இவருக்கென்றே தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கும். இவர் ரசிகர்களால் சின்னக் கலைவாணர் என அழைக்கப்பட்டார்.




விவேக்கிற்கு அருள் செல்வி என்ற மனைவியும், அமிர்த நந்தினி, தேஜஸ்வினி என்ற 2 மகள்களும், பிரசன்ன குமார் என்ற மகனும் இருந்தார். கடந்த 2015ம் ஆண்டு டெங்கு மற்றும் மூளைக்காய்ச்சல் காரணமாக மகன் உயிரிழந்து விட்டார். விவேக்கின் மூத்த மகள் அமிர்த நந்தினிக்கு முன்னரே திருமணம் முடிந்த நிலையில்,  2வது மகளுக்கு நேற்று திருமணம் நடந்தது. தேஜஸ்வினி -பிரபு திருமணம் சென்னையில் உள்ள விவேக் இல்லத்தில் உறவினர்கள் முன்னிலையில் நடந்தது. 




திருமணத்திற்கு பின்னர் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர். திருமணத்திற்கு வந்தவர்களுக்கு விவேக்கின் நினைவாக மரக்கன்றுகள் மற்றும் மூலிகை பூச்செடிகள் வழங்கப்பட்டது. நடிகர் விவேக் க்ரீன் கலாம் என்ற திட்டத்தின் மூலம் ஒருகோடி மரக்கன்றுகள் நட வேண்டும் என்பதை கனவாக வைத்திருந்தார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

சமீபத்திய செய்திகள்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

தங்கம் விலை நேற்று மட்டுமில்லைங்க இன்றும் குறைவு தான்... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ஆடி வெள்ளிக்கிழமையன்று... மங்கள கெளரியாக பாவித்து அம்மனுக்கு விரதம் இருப்போம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்