- மயிலாடுதுறை வீ.யோகாஸ்ரீ
நீதி தவறாமல் செயல்படுவோமா?
பெண் நீதிபதிகள் தினத்தை கொண்டாடுவோம். உலகளவில் பெண்கள் நீதித்துறையில் அவர்களின் பங்களிப்பை நினைவுகூர்ந்து இந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 10 அன்று கொண்டாடப்படுகிறது.
பெண்கள் நீதித்துறையில் முன்னேறுவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. நீதிமன்றங்களில் பெண்களின் பங்கு மிகவும் முக்கியமானது என்பதை உணர்ந்து ஒவ்வொரு பெண்களும் நீதித்துறையில் சிறந்து விளங்க முயற்சி செய்வோம்.
சமத்துவம் மற்றும் நீதி நிலைநாட்ட பெண்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். பெண் நீதிபதிகள் தைரியமாகவும் நேர்மையாகவும் தீர்ப்பளிக்கிறார்கள். இந்த நாள் பெண்களின் திறமையை உலகுக்கு எடுத்துக் காட்டும் சிறந்த நாளாகும்.
பெண்களின் கல்வி மற்றும் திறமை,வளர்ச்சியால் பெண் நீதிபதிகள் சமூகத்தில் நீதியையும் சமத்துவத்தையும் பாதுகாப்பதோடு, அவர்கள் மனித உரிமைகளை பாதுகாக்கவும் முக்கிய பங்கு வகிக்கிறார்கள்.

பெண்களுக்கு முன்மாதிரியாக பல பெண் நீதிபதிகள் உள்ளார்கள். அவர்களின் தன்னம்பிக்கையுடன் சமூகத்திற்கு சேவை செய்வதை பார்த்து நாம் நீதித்துறையில் பெண்களின் எண்ணிக்கை அதிகரிக்க முயற்சி செய்ய வேண்டும்.
இது சமூக முன்னேற்றத்திற்கு நல்ல மாற்றமாகும். பெண்களின் குரல் நீதிமன்றங்களில் வலுப்பெறுகிறது என்பதை நினைத்து நாம் பெருமைப்பட வேண்டும். பெண்கள் எல்லா துறையிலும் முன்னேற முடியும் என்பதை
இளம் பெண்களுக்கு ஒர் ஊக்கம் அளிக்க வேண்டும் . கல்வி மற்றும் உழைப்பின் மூலம் உயர்ந்த நிலையை அடையலாம் என்பதை உணர்த்து செயல்பட வேண்டும் .
சமூகம் பெண்களின் திறமையை மதிக்க வேண்டும். மேலும் பெண்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்பதால் நீதித்துறை வளர்ச்சியில் பெண்களின் பங்கு முக்கியமாக கருதப்படுகிறது. பெண்களுக்கு நீதித்துறையில் சம வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதாலும், பல பெண்கள் தங்கள் அறிவாலும் உழைப்பாலும் நீதிபதிகளாக உயர்ந்துள்ளதை நாம் அனைவரும் போற்றிடுவோம்.
இந்த நாள் பெண்களின் சாதனைகளை நினைவுகூர்ந்து சமூக மாற்றத்திற்கும் நீதிக்கும் வழிகாட்ட நாம் அனைவரும் வாழ்ந்திடுவோம்.
(வீ.யோகாஸ்ரீ, அஞ்சல் அட்டையில் 1330 திருக்குறளை எழுதி முப்பால் விருது பெற்றுள்ளார். வண்ணத்துப்பூச்சிகள் 2025 முப்பெரும் விழாவில் சிறந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் விருது பெற்றுள்ளார். கலைத் திருவிழாவில் மாறுவேடம் மற்றும் தனிநபர் நடிப்பில் மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பெற்றுள்ளார். பேச்சுப் போட்டியில் சுதந்திரா சொற்சுடர் விருது பெற்றுள்ளார் . தடம் பதிக்கும் தளிர்கள் திருவண்ணாமலை குழுமத்தில் 3 முறை உலக சாதனை செய்துள்ளார்)
சிறுகதை: இதுதான் ட்ரெண்ட்!
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
என்னை நேசிப்பவளுக்கு!
அறிவின் ஒளியே எங்கள் ஆசான்
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!
கைப்புடிச்ச கண்ணாளா காலத்துக்கும் வருவீகளா!
{{comments.comment}}