சென்னை: ஆர் ஜே பாலாஜி இயக்கும் சூர்யா 45 திரைப்படத்தில் நடிகர் யோகி பாபு இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஆர் ஜே பாலாஜி பண்பலை தொகுப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பல்வேறு ரசிகர்களிடையே அறிமுகமானவர். இதனைத் தொடர்ந்து தீயாய் வேலை செய்யணும் குமாரு என்ற படத்தில் காமெடியனாக கலக்கி மக்களிடையே பாராட்டு பெற்றார். இவரின் காமெடி நடிப்பிற்கென்றே தனி ரசிகர் பட்டாளம் உருவானது. இந்த காமெடியை மையமாக வைத்து நானும் ரவுடிதான் படத்தில் நடித்து பல்வேறு தரப்பிலும் பாராட்டை பெற்றார்.

எல்கேஜி படம் மூலம் நாயகனாக அறிமுகமாகி தற்போது வளர்ந்து வரும் இயக்குனர்களில் ஒருவராகவும் திகழ்ந்து வருகிறார் நடிகர் ஆர்.ஜே பாலாஜி. இவர் இயக்கும் படங்கள் அனைத்தும் காமெடியை மையமாகக் கொண்டு ஜாலியான குடும்பப் பங்கான திரைப்படமாக அமைவதால் பெண் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வரிசையில் மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம் உள்ளிட்ட படங்கள் மக்களிடையே வரவேற்பை பெற்று ஹிட் கொடுத்தது. இவர் சித்தார்த்தை வைத்து இயக்கிய சொர்க்கவாசல் என்ற திரைப்படம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியானது.
இதனைத் தொடர்ந்து தற்போது சூர்யாவின் 45 ஆவது திரைப்படத்தை ஆர் ஜே பாலாஜி இயக்கி வருகிறார். பெயரிடப்படாத இப்படத்திற்கு தற்காலிகமாக சூர்யா 45 என பெயரிட்டுள்ளனர். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு ஜி.கே விஷ்ணு ஒளிப்பதிவை கையாளுகிறார். முதலில் ஏ ஆர் ரகுமான் இசையமைப்பதாக கூறப்பட்டது. ஆனால் சில காரணங்களால் ஏ ஆர் ரகுமான் விலகியதால், தற்போது இளம் இசையமைப்பாளரான சாய் அப்யங்கர் இசையமைக்கிறார்.
படப்பிடிப்பு பணிகள் தற்போது கோவை பகுதிகளை சுற்றி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் படத்தின் கதாபாத்திரங்கள் குறித்த அறிவிப்பை அவ்வப்போது பட குழு வெளியிட்டு வருகிறது. அதன்படி சமீபத்தில் நடிகை திரிஷா நடிப்பதாக பட குழு அறிவிப்பை வெளியிட்டது. இதனை தொடர்ந்து ஸ்வசிகா மற்றும் இந்திரன்ஸ் ஆகிய இரண்டு மலையாள கலைஞர்கள் சூர்யா 45 திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளனர்.
ஸ்வாசிகா ஏற்கனவே லப்பர் பந்து படத்தில் யசோதை கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே, பேராதரவை பெற்ற நிலையில் இப்படத்தின் கதாபாத்திரம் எப்படி இருக்கும் என்று ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. கிட்டத்தட்ட சூரரைப் போற்று படத்தில் அபர்ணா பாலமுரளி நடித்தது போல ஒரு போல்டானா அதிரடியான கேரக்டர் ஸ்வாசிகாவுக்கு இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது சூர்யா 45 திரைப்படத்தின் அடுத்த அப்டேட் வெளியாகி படம் குறித்து ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்திக் கொண்டே வருகிறது. அதாவது காமெடி நடிகர் யோகி பாபு மற்றும் நடிகை ஷிவாதா இப்படத்தில் இணைந்துள்ளதாக படக்குழு தகவல் வெளியிட்டுள்ளது. இவர் ஏற்கனவே நடிகர் சூரியுடன் கருடன் திரைப்படத்தில் நடித்தவர் என்பது நினைவிருக்கலாம்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
100 நாள் வேலை திட்டம் பெயர் மாற்றம்... டிசம்பர் 18ம் தேதி காங்கிரஸ் போராட்டம்: செல்வப்பெருந்தகை
எஸ்ஐஆர் பணிகள் மூலம் தமிழ்நாட்டில் ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கப்பட வாய்ப்பு
Political Maturity on cards?.. கே.ஏ.செங்கோட்டையன் வகுக்கும் பாதையில் பயணிக்குமா தவெக?
ஈரோடு விஜய் பிரச்சாரம்.. ஏகப்பட்ட நிபந்தனைகள்.. கடைப்பிடிப்போம் என பத்திரம் கொடுத்த தவெக!
மார்கழி மாதம் .. அணிவகுத்து நிற்கும் முக்கிய வழிபாடுகள்!
வேலூர் ஸ்ரீபுரம் பொற்கோவிலில்.. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாளை வழிபாடு
மாசமோ மார்கழி மாசம்.. வாசலில் கலர் கலர் கோலம்.. தினம் ஒரு கோலம்!
தொந்தி மாமா வந்தாராம்.. தொப்பியை தலையில் போட்டாராம்!
மாதங்களில் மார்கழி.. Ode to the Auspicious Marghazi Month!
{{comments.comment}}