சென்னை: நடிகைக்கு கவர்ச்சி அவசியம். ஒரு நடிகை அழகா இருந்தா அதை கொண்டாடணும்.. இதுல என்ன தப்பு இருந்திட போகுது.. என நடிகை ஆண்ட்ரியா தெரிவித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் ஒரு நடிகையாகவும், பாடகியாகவும் வலம் வருகிபவர் நடிகை ஆண்ட்ரியா. இவர் தமிழ் சினிமாவில் முதலில் ஒரு பாடகியாக அறிமுகமாகி பின்னர் பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர். இவர் சினிமா பாடல்கள் மட்டுமல்லாமல் பாப் பாடல்களிலும் சிறந்த விளங்கி வருகிறார். தற்போது வயது 40 ஆக இருந்தாலும் இவர் இன்றும் இளமையாவே இருக்கிறார். இவர் இன்று வரை திருமணம் செய்யவில்லை.
தினத்தந்திக்கு ஒரு பேட்டி கொடுத்துள்ளார் ஆண்ட்ரியா. அதில் மனம் விட்டுநிறைய சொல்லியுள்ளார். அதிலிருந்து சில..

பச்சைக்கிளி முத்துச்சரம் படம் தான் எனக்கு முதல் படம். அந்த நேரத்தில் நான் அமெரிக்காவில் மியூசிக் கோர்ஸ் படிக்க ரெடியா இருந்தேன். நான் மிடில் கிளாஸ் ஃபேமிலி. அதனால இந்தப் படம் நடிச்சா காசு கிடைக்கும் என நினைத்து இந்தப் படத்தில் நடிச்சேன். ஆனா இப்போ நிலைமை வேற மாதிரி ஆயிடுச்சு.
நான் நடித்த நடிகர்களில் கமல்ஹாசனும் கார்த்தியும் எனக்கு பிடித்தவர்கள். விஸ்வரூபம், ஆயிரத்தில் ஒருவன் படத்தை என்னால் மறக்கவே முடியாது. நான் பாடிய பாடலில் கோவா படத்தில்.. இதுவரை இல்லாத உணர்விது.. என்ற பாடல் எனக்கு பிடிக்கும்.
நடிகைகளுக்கு கவர்ச்சி நிச்சயமாக அவசியம் தான். கவர்ச்சி காட்டாத நடிகைகளை தப்பு சொல்ல முடியாது. ஆனால் அவங்களுக்கு வாய்ப்பு கொஞ்சம் தான் இருக்கும். ஏன்னா சில கதைக்கு கவர்ச்சி தேவையா இருக்கும். அந்த சமயம் கவர்ச்சி காட்டாத நடிகைகள் முகம் கண்ணுக்கு தெரியாமல் போய்விடும். ஒரு பெண் அழகாக இருந்தால் அதை கொண்டாடனும். இதுல என்ன தப்பு இருந்திட போகுது.
கல்யாணம் பண்ணனும்.. அதுக்கு ஒரு நல்ல ஆண் தான் வேணும். நேர்மையான நல்ல ஆள் கிடைக்கட்டும். பார்க்கலாம் என்று கலகலப்பாக பேசியுள்ளார் ஆண்ட்ரியா.
வினாத்தாள் கசிவு.. தண்டனைகளை விரைவுபடுத்த விரைவு நீதிமன்றங்கள்.. பிரதமர் மோடி
காங்கிரஸ், பாஜக, திமுக - நாடாளுமன்றத்தில் தனித்தனியாக போராட்டம்
நீட் தேர்வு வாக்குறுதிகள் தோற்றுவிட்டன; மாநிலங்களை நம்ப வேண்டிய நேரம் இது.. மு.க.ஸ்டாலின்
இளைஞர்களின் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய தீங்கு விளைவித்தது மோடிதான்.. ராகுல் காந்தி
Jana Nayagan review முதல்வர் விஜய்யின் ஜனநாயகன் எப்படி இருக்கு?
ஒரு ஓட்டில் தோல்வி...தேர்தல் வழக்கை வாபஸ் பெற்றார் திமுக பெரியகருப்பன்
சிந்தனைச் சிதறல்... இறையும் இயற்கையும் இரண்டறக் கலந்த ஒன்றே!
செக் மோசடி வழக்கு: நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை தண்டனை
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில்.. களை கட்டும் ஆடி முளைக்கொட்டு திருவிழா!
{{comments.comment}}