சென்னை: தெலுங்கர்கள் குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில் கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகை கஸ்தூரி ஜாமின் கோரி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
சென்னையில் நடந்த பிராமண சமுதாயத்தினர் பங்கேற்ற போராட்ட கூட்டத்தில் கலந்து கொண்டு 300 ஆண்டுகளுக்கு முன்பு வந்த ஒரு ராஜாவுக்கு அந்தப்புர மகளிருக்கு சேவை செய்ய வந்தவர்களை, தெலுங்கு பேசியவர்களை எல்லாம் தமிழர்கள் இனம் என்று சொல்லும்போது.. எப்போதோ வந்த பிராமணர்களை தமிழர்கள் இல்லை என்று சொல்வதற்கு இங்கு யார் இருக்கிறார்கள் என்று பேசியிருந்தார்.

இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர் மீது சென்னை, மதுரை, கோவையில் தெலுங்கு சங்கங்கள் சார்பில் புகார்கள் தரப்பட்டன. இதையடுத்து பல்வேறு பிரிவுகளில் கஸ்தூரி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் முன்ஜாமின் கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அங்கு அவருக்கு முன்ஜாமின் கிடைக்கவில்லை. இந்த நிலையில் தலைமறைவாக இருந்து வந்த கஸ்தூரியைக் கைது செய்ய போலீஸார் தீவிரம் காட்டினர்.
2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கஸ்தூரி தேடப்பட்டு வந்தார். இந்தப் பின்னணியில் ஹைதராபாத்தில் ஒரு தயாரிப்பாளரின் வீட்டில் கஸ்தூரி அடைக்கலம் புகுந்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் சென்னை எழும்பூர் போலீஸார் அங்கு விரைந்து சென்று கஸ்தூரியைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட கஸ்தூரி சென்னைக்குக் கொண்டு வரப்பட்டார். சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் வைத்து முதலில் போலீஸார் விசாரணை நடத்தினர். இதையடுத்து அவர் எழும்பூர் நீதிமன்ற, நீதித்துறை நடுவர் ரகுபதி ராஜா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.
விசாரணைக்குப் பின்னர் கஸ்தூரியை நவம்பர் 29ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து கஸ்தூரி புழல் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஒரு நாள் காவலில் இருந்த நிலையில், நடிகை கஸ்தூரி ஜாமின் கோரி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று மனுத்தாக்கல் செய்துள்ளார். முன்னதாக 2 குழந்தைகள் வீட்டில் தனியாக இருப்பாங்க. நான் சிங்கிள் மதர். எனவே எனக்கு ஜாமின் அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் நடிகை கஸ்தூரி.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தண்ணீர் திறந்தது கர்நாடகா : காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
"தனிமைப்பட்டு நிற்கிறார் CM" – காவிரி விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்
கொளத்தூர் தொகுதியில் தேர்தல் முறைகேடு? - திமுக என்.ஆர்.இளங்கோ பரபரப்பு பேட்டி!
ஒற்றுமையின்றி செயல்படுபவர்களுக்கு கட்சியில் இடமில்லை : ராகுல் காந்தி எச்சரிக்கை
கபிணி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு.. போராட்டக்காரர்களுக்கு டி.கே.சிவக்குமார் எச்சரிக்கை
வணிக பயன்பாட்டு எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.200 குறைவு: ஓட்டல் உரிமையாளர்கள் நிம்மதி!
வேளாண் பட்ஜெட் 2026: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைத்து சிறப்பு பூஜை செய்த அமைச்சர் வினோத்!
கட்டணச்சலுகை இல்லாவிட்டாலும் UDID அட்டை இருந்தால் சிறப்பு பெட்டிகளில் பயணிக்கலாம்!
தோப்பு வெங்கடாசலம் கட்சிப் பொறுப்பிலிருந்து விடுவிப்பு: திமுக தலைமை அதிரடி அறிவிப்பு!
{{comments.comment}}