சென்னை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மாவை ஒழிப்பேன் என்று பேசியதை வைத்து நடந்து வரும் விவாதத்தில் நடிகை கஸ்தூரி தன்னையும் இணைத்துக் கொண்டுள்ளார். ஆவேசமாக ஒரு டிவீட் போட்டுள்ளார்.
அவரது சரமாரி டிவீட்டுகளைத் தொடர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கஸ்தூரியை டிவிட்டரில் பிளாக் செய்துள்ளார். இதையும் கேள்வி கேட்டுள்ளார் கஸ்தூரி.
சென்னையில் நடந்த சனாதன எதிர்ப்பு மாநாட்டில் கலந்து கொண்டு உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், சனாதன தர்மா என்பது டெங்கு, கொரோனா, மலேரியா மாதிரி. அதை எதிர்க்க முடியாது, ஒழிக்க வேண்டும். அப்படித்தான் சனாதன தர்மத்தையும் ஒழிக்க வேண்டும் என்று உதயநிதி பேசியிருந்தார்.
அவரது இந்த கருத்துக்கு பாஜக, இந்து அமைப்புகள், இந்து மத சாமியார்கள் உள்ளிட்டோர் எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்துள்ளனர். நடிகை கஸ்தூரியும் இதுதொடர்பாக சரமாரியான டிவீட்டுகள் போட்டிருந்தார்.
டிவீட் நம்பர் 1:
டெங்கு மலேரியா உங்க தாய்க்கும் மாப்பிள்ளைக்குமே முற்றி உள்ளதே...அவங்களை என்ன பண்ணுறதா உத்தேசம்? ஊருக்கு உபதேசம் அதுவே திராவிடிய பரம்பரை யுக்தி. அவ்வளவு சனாதனத்தின் மேல் வெறுப்பு உள்ளவர்களுக்கு இந்து கோவில் சொத்து மட்டும் கேட்குதோ ? முதல்ல உண்டியல்ல இருந்து கைய எடுங்க !
டிவீட் நம்பர் 2:
இந்தியாவில் யாராவது பொது இடத்தில் வந்து நின்று கொண்டு, சன்னி இஸ்லாமை ஒழிக்க வேண்டும், கத்தோலிக்க நம்பிக்கை என்பது ஒரு தொற்று வியாதி என்று சொன்னால் என்னாகும்.. கற்பனை பண்ணி பார்க்க முடியுமா??? திமுகவும், காங்கிரஸும் எப்படிக் கூப்பாடு போடுவார்கள்.. கம்யூனிஸ்டுகள் என்ன சொல்வார்கள்..? (தமிழ்நாட்டில் மத நம்பிக்கையை பாதிக்கும் வகையிலான திரைப்படங்கள் கூட தடை செய்யப்பட்டுள்ளன)
டிவீட் நம்பர் 3:
உதயநிதியின் வெறுப்புப் பேச்சு, வன்முறையைத் தூண்டுவதற்குப் பதில், தமிழ்நாட்டில் மத விழிப்புணர்வை தூண்டி விட்டுள்ளது. குறிப்பாக தமிழ்நாடு காங்கிரஸ்காரரக்ள் மத்தியில். சனாதனம் குறித்தும், இந்துக்கள் குறித்தும் இவர்கள் அளித்துள்ள விளக்கங்கள் வினோதமானவை.
கஸ்தூரியின் டவீட்டுகளுக்கு அவரது ஆதரவாளர்கள் ஆதரவாகவும், திமுகவினர் கடும் எதிர் வினையாற்றியும் வருகின்றனர். இந்த நிலையில் கஸ்தூரியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் டிவிட்டரில் பிளாக் செய்துள்ளார்.
கரூர் சம்பவ வழக்கில் நாளை விசாரணை : ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோருக்கு தடை விதிக்க திமுக கோரிக்கை
ஜூலை 21ம் தேதி சென்னை வருகிறார் ராகுல்காந்தி: முதல்வர் விஜய்யை சந்திப்பாரா?
தவெக அரசுக்கு ஓராண்டு அவகாசம் தர வேண்டும்: அண்ணாமலை பரபரப்பு பேச்சு!
மதிமுக.,விடம் திமுக குதிரை பேரம் நடத்தியது: வைகோ பகீர் குற்றச்சாட்டு
செந்தில் பாலாஜி, அசோக்குமாரின் முன்ஜாமீன் வழக்கு வேறு நீதிபதிக்கு மாற்றம்!
ரேஸ் வேண்டாம்...நடிக்க வாங்க அஜித் - மன்சூர் அலிகான் வேண்டுகோள்
அமைச்சர் ஆனந்துடன் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் திடீர் சந்திப்பு
அயோத்தி ராமர் கோயில் நன்கொடையில் தினசரி ரூ.6-8 லட்சம் திருட்டா?
சம்மன் அனுப்பிய போலீஸ்...ஆஜராகாத செந்தில் பாலாஜி...அடுத்து என்ன?
{{comments.comment}}