சென்னை: தெலுங்கு பேசும் மக்கள் குறித்து இழிவாக பேசியதாக தொடரப்பட்டுள்ள வழக்கில் நடிகை கஸ்தூரி முன்ஜாமின் கேட்டு, மனு தாக்கல் செய்த நிலையில், கஸ்தூரியின் முன்ஜாமின் மனுவை இன்று தள்ளுபடி செய்து மதுரை உயர்நீதிமன்றம் கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது .
இதையடுத்து இரண்டு நாட்களுக்குள் தனிப்படை அமைத்து விரைவில் கஸ்தூரி கைது செய்யப்படுவார் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் சென்னையில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்ட நடிகை கஸ்தூரி, ராஜாக்களுக்கு சேவகம் செய்வதற்காக தெலுங்கு பேசும் பெண்கள் கொண்டுவரப்பட்டார்கள் என்று தெலுங்கு பேசும் மக்களை தாக்கி பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதனால் தெலுங்கு பேசும் அமைப்பினர் கஸ்தூரியை உடனடியாக கைது செய்ய வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். அதன் விளைவாக மதுரை, திருச்சி, சென்னை, என பல்வேறு முக்கிய நகரங்களில் புகார்களும் எழுந்தன.
இந்த புகார்களின் அடிப்படையில் கஸ்தூரி வீட்டிற்கு சென்ற போலீசார் கஸ்தூரியை தொடர்பு கொள்ள முயற்சி செய்தனர். ஆனால் அவர் போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு வீடை பூட்டிவிட்டு தலைமறைவானார். இதனால் நடிகை கஸ்தூரியை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
இதற்கிடையே தலைமறைவான கஸ்தூரி கடந்த நவம்பர் 11ஆம் தேதி மதுரை திருநகரில் பதியப்பட்ட வழக்கில் முன்ஜாமின் கேட்டு மதுரை ஹைகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த நிலையில் இந்த மனுவை இன்று விசாரித்த உயர் நீதிமன்றக் கிளை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் சரமாரியாக பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தார். கஸ்தூரியை கைது செய்து விசாரிக்க வேண்டியிருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இன்று இந்த மனு மீதான தீர்ப்பை நீதிபதி அளித்தார். அப்போது, கஸ்தூரியின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்வதாக அவர் உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து இரண்டு நாட்களில் தனிப்படை அமைத்து கஸ்தூரியை கைது செய்யும் நடவடிக்கைகளை காவல்துறை முடுக்கி விடவுள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே போலீசாரின் சம்மனை பெற மறுத்து நடிகை கஸ்தூரி தலைமறைமாக உள்ள நிலையில் விரைவில் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தமிழ்நாடு பணியாது... நாம் ஒன்றாக எழுவோம்.. இது ஓரணி vs டெல்லி அணி.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
என் உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்களே... எனக்கு உங்களைத் தவிர வேறு எவருமில்லை: டாக்டர் அன்புமணி!
என் வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி.. வைத்தது யார்.. சீக்கிரம் கண்டுபிடிப்பேன்.. டாக்டர் ராமதாஸ்
அரசியல் தலைவர்கள் 75 வயதில் ஓய்வு பெற வேண்டும்.. ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு
ஜூலை 27, 28 ஆகிய தேதிகளில் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!
சாதனை இந்தியர் சுபான்ஷு சுக்லா.. 14ம் தேதி பூமி திரும்புகிறார்.. தடபுடலாக வரவேற்கத் தயாராகும் நாசா!
தேனியில் விவசாயிகளுடன் இணைந்து ஆடு மாடு மேய்ப்பேன்.. சீமானின் அதிரடி அறிவிப்பால் பரபரப்பு!
அதிவேக இணையத்தில் ஜப்பான் புதிய உலக சாதனை.. இந்தியாவை விட 16 மில்லியன் மடங்கு அதிகம்!
ஆட்சித்திறனுக்காக நோபல் பரிசு தந்தால் அதை எனக்குத் தரலாம்.. அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி
{{comments.comment}}