பாதிப்புக்குள்ளாகும் பிற பெண்கள் மீதும் கவனம் செலுத்த வேண்டாமா.. நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன்

Mar 08, 2026,07:16 PM IST

சென்னை: பெண்களின் நலன் குறித்து உண்மையாக அக்கறை இருப்பின், நீதிக்காக போராட வழியில்லாமல், சட்ட உதவியோ பொருளாதார ஆதரவோ இல்லாமல், அடுத்த உணவு கூட உறுதியில்லாமல் வாழும் பல பெண்கள் இருக்கிறார்கள். அவர்களுக்காகவும் இதே அளவு கவனம் செலுத்தப்பட வேண்டாமா? என்று நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் கேட்டுள்ளார்.


நடிகர் விஜய் தொடர்பாக தான் கூறிய கருத்து தவறாக எடுத்துக் கொள்ளப்பட்டது குறித்து அவர் விளக்கியுள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள கருத்து:


நடிகர் விஜய் அவர்களின் தனிப்பட்ட விஷயங்கள் பற்றியும், அவருடைய அரசியல் வருகை பற்றியும் நான் எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை.


விஜயை நான் அறிந்தது ஒரு மரியாதையான, அமைதியான, மென்மையான இணை நடிகராக மட்டுமே. அவருடைய தாயாரைப் பற்றியும் எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. அதற்கும் மேலாக எனக்கு எந்த தனிப்பட்ட அறிவும் இல்லை. சமீபத்தில் நான் ஒரு மேடையில் பேசிய சில வார்த்தைகள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு, விஜயின் அரசியல் வருகைக்கும் இப்போது பேசப்படும் தனிப்பட்ட விஷயங்களுக்கும் தவறாக இணைக்கப்பட்டுள்ளன.




ஒரு நாளிதழ் என்னிடம் கருத்து கேட்டபோது, மக்கள் தனிப்பட்ட விஷயங்களையும் அரசியல் செயல்பாடுகளையும் தனித்தனியாக பார்க்கத் தெரிந்தவர்கள் என்று தான் நான் கூறினேன். மேலும், இது தேர்தல் காலம் என்பதால் இந்த விஷயம் அளவுக்கு மீறி பெரிதாக்கப்படுகிறது என்றும் சொன்னேன்.


இன்னும் ஒரு விஷயம்—பெண்களின் நலன் குறித்து உண்மையாக அக்கறை இருப்பின், நீதிக்காக போராட வழியில்லாமல், சட்ட உதவியோ பொருளாதார ஆதரவோ இல்லாமல், அடுத்த உணவு கூட உறுதியில்லாமல் வாழும் பல பெண்கள் இருக்கிறார்கள். அவர்களுக்காகவும் இதே அளவு கவனம் செலுத்தப்பட வேண்டாமா?


இந்த அறிக்கை என் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தவும், ஏற்பட்ட தவறான புரிதலை சரி செய்யவும் மட்டுமே.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!

news

கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்