லண்டன்: இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனாக்கை சந்தித்துப் பேசியுள்ளார் நடிகை மனீஷா கொய்ராலா. தனது தாய் நாடான நேபாளத்துக்கு வருகை தருமாறும் அங்கு டிரக்கிங் (மலை ஏற்றம்) செய்யலாம் என்றும் அவர் அப்போது நேபாள பிரதமருக்கு அழைப்பு விடுத்தார்.
நடிகை மனீஷா கொய்ராலாவின் பூர்வீகம் நேபாளம் ஆகும். இந்தியாவில், இந்திப் படங்களில் நடித்துப் பிரபலமான மனீஷா கொய்ரா சமீபத்தில் நெட்பிளிக்ஸில் வெளியான ஹீராமண்டி தொடரில் சிறப்பாக நடித்து பலரது பாராட்டையும் பெற்றுள்ளார். இந்த தொடருக்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில் லண்டன் சென்ற மனீஷா, அங்கு பிரதமர் ரிஷி சுனாக்கை சந்தித்துப் பேசியுள்ளார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரான ரிஷி சுனாக்கை சந்தித்த மனீஷா கொய்ராலா இதுகுறித்த புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டுள்ளார். இதுகுறித்து மனீஷா கூறுகையில், இங்கிலாந்து பிரதமரை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சியைத் தருகிறது. இங்கிலாந்து - நேபாளம் இடையிலான 100 ஆண்டு கால நட்பைப் பாராட்டி நடந்த நிகழ்ச்சி இது. இதில் எனக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த சந்திப்பின்போது பிரதமர் ரிஷி சுனாக் மிகவும் சகஜமாக பேசினார். நேபாளம் குறித்து பெருமிதம் வெளியிட்டார்.
அவரை நேபாளத்துக்கு குடும்பத்தோடு வருமாறும், எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் மேற்கொள்ளலாம் என்றும் உரிமையோடு அழைத்தேன். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலரும் ஹீராமண்டி தொடரைப் பார்த்து ரசித்ததாகவும், எனது நடிப்பு நன்றாக இருந்தது என்றும் பாராட்டியது மகிழ்ச்சியைக் கொடுத்தது என்றார் மனீஷா கொய்ராலா.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை... இன்று திடீர் குறைவு... எவ்வளவு தெரியுமா?
வாழப்பாடி வெள்ளாள குண்டம் ராஜலிங்கேஸ்வர் சிவன் கோவில் நந்தியைப் பார்த்திருக்கீர்களா?
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்கப் போகிறீர்களா.. கமல்ஹாசனே சொன்ன ஹேப்பி நியூஸ்
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 08, 2025... நல்ல காலம் பிறக்குது
{{comments.comment}}