சென்னை: பேண்டஸி ரொமாண்டிக் காமெடி படத்தில் நடிகை நித்யா மேனன் கமிட்டாகி உள்ளாராம்.
நடிகை நித்யா மேனன் சிறந்த நடிகை மட்டுமல்லாமல் சிறந்த பின்னணி பாடகியும் கூட. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்துள்ளார். தமிழில் இவர் நடித்துள்ள அனைத்து படங்களும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று ஹிட் கொடுத்தது.

குறிப்பாக இவர் நடித்த வெப்பம், ஓ காதல் கண்மணி, மெர்சல், காஞ்சனா 2, திருச்சிற்றம்பலம், உள்ளிட்ட படங்கள் மூலம் ட்ரெண்டானவர். இப்படங்களில் நடித்ததன் மூலம் இவருக்கென்றே தனி ரசிகர் பட்டாளம் உருவானது. இதனைத் தொடர்ந்து தற்போது புதிய படத்தில் கமிட் ஆகியுள்ளார் நடிகை நித்யா மேனன். இப்படம் ஃபேண்டஸி ரொமான்டிக் காமெடி கதை களத்தில் அமைந்துள்ளதாம்.
ஃபர்ஸ்ட் டைம் தியேட்டர்ஸ் மற்றும் பார்டர் மீடியா நிறுவனங்கள் தயாரிக்கும் இப்படத்தை இயக்குனர் காமினி எழுதி இயக்குகிறார். இப்படத்தில் நித்யா மேனன் நாயகியாகவும், வினய் ராவ் மற்றும் நவ்தீப் கதாநாயர்களாகவும் நடிக்கிறார்கள். நடிகர் நவ்தீப் நீண்ட இடைவேளைக்குப் பிறகு தற்போது தமிழில் புதுப்படத்தில் கமிட் ஆகி உள்ளார்.

இவர் 2005 ஆம் ஆண்டு ஆர்யா நடிப்பில் வெளியான அறிந்தும் அறியாமலும் படத்தில் மூலம் அறிமுகமானவர். இவர் அறிமுகமான முதல் படமே மிகப்பெரிய ஹிட் பெற்றது. அதுவும் இப்படத்தில் அமைந்துள்ள தீப்பிடிக்க தீப்பிடிக்க பாடல் மிகப்பெரிய அளவில் வைரலானது.
இவர்களுடன் பிரதீக் பாப்பர், தீபக் பரம்போல் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்க உள்ளனர். இதில் தீபக் பரம்போல் சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி தமிழிலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்று ஹிட் கொடுத்த மஞ்சுமல் பாய்ஸ் படத்தில் நடித்த ஹீரோ என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை பற்றிய அறிவிப்புகளை அடுத்தடுத்து வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
ஓபிஎஸ்.,க்கு இடமில்லை...ஸ்டாலினுக்கு அனுபவமில்லை...விஜய் தலைவரே அல்ல...வெளுத்து வாங்கிய இபிஎஸ்
நான் ரெடி.. அருமை அண்ணன் இபிஎஸ்ஸுடன் பேச டிடிவி தினகரன் தயாரா.. ஓ.பி.எஸ். அதிரடி சவால்!
பிப்ரவரி 3ம் தேதி கூட்டணியை அறிவிக்கும் தேமுதிக.. யாருடன் இணைகிறது?
தமிழக வாக்காளர் பட்டியல் 2026...பெயர் சேர்க்க 10 நாட்கள் கால அவகாசம் நீட்டிப்பு
மதுக்கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும்... பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
முருக பக்தர்களுக்கு குட் நியூஸ்...தைப்பூசத்திற்கு சென்னையில் இருந்து சிறப்பு ரயில்
அக்கறையற்ற அமைச்சரின் பேச்சு... வேதனைக்குரியது மட்டுமல்ல கண்டனத்திற்குரியதும்: எடப்பாடி பழனிச்சாமி
நெல்லை தொகுதியையும், என்னையும் பிரித்து பார்க்க முடியாது: நயினார் நாகேந்திரன்
டி20 உலகக் கோப்பை: இந்தியாவைப் புறக்கணிக்கும் முடிவில் பாகிஸ்தான் தீவிரம்?
{{comments.comment}}