சென்னை: ஜெயம், அந்நியன் உள்ளிட்ட பல படங்கள் மூலம் ரசிகர்களின் அன்பை அள்ளிக் குவித்த முன்னாள் ஹீரோயின் சதா சயீத் இப்போது முழுக்க புகைப்படக் கலைஞராக மாறி அசத்திக் கொண்டிருக்கிறார். அதிலும் எப்போதுமே பார்க்கப் பார்க்க அலுக்காத வன விலங்குகளின் புகைப்படங்களையும், வீடியோக்களையும் எடுத்துத் தள்ளிக் கொண்டிருக்கிறார்.
ஜெயம் படம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் சதா. அதில் அவரது இயல்பான தோற்றம் மட்டுமல்லாமல் அவர் பேசிய வசனமும் கூட வெகு பிரபலமானது. போய்யா போ போ என்று அவர் பேசிய வசனம் நீண்ட காலம் பலராலும் இமிடேட் செய்யப்பட்டது. பிறகு ஷங்கர் இயக்கத்தில் விக்ரமுடன் நடித்த அந்நியன் படத்திலும் அசத்தியிருந்தார் சதா.

தொடர்ந்து பல படங்களில் தமிழ், தெலுங்கு, கன்னடம் என மாறி மாறி நடித்து வந்த சதா ஒரு கட்டத்தில் அப்படியே ஆளைக் காணோம். இடையில் அவர் நடிப்பையும் விட்டு விட்டார். ஆனால் சமூக வலைதளங்களில் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வந்தார் சதா. இந்த நிலையில்தான் இப்போது அவர் கிட்டத்தட்ட ஒரு முழு நேர வன விலங்குகள் புகைப்படக் கலைஞராக மாறி இன்னொரு பரிமாணத்தில் அசத்திக் கொண்டிருக்கிறார்.
அடிப்படையில் செல்லப் பிராணிகள் என்றால் சதாவுக்குக் கொள்ளைப் பிரியம். அவர் வீட்டிலேயே நிறைய நாய்களை வளர்த்து வருகிறார். இதுதவிர செல்லப்பிராணிகள் வளர்ப்பு குறித்து தனது யூடியூப் தளத்திலேயே அவர் பல வீடியோக்களைப் போட்டு வருகிறார். இந்த நிலையில்தான் அடிக்கடி வனப் பகுதிகளுக்குச் சென்று லைவாக விலங்குகளை புகைப்படம் எடுத்து அதையும் வெளியிட்டு வருகிறார். அதில் பலமுறை அவரது பயணங்கள் திரில்லாக அமைந்துள்ளதாக அவரே குறிப்பிட்டுள்ளார்.

புலிகளைத்தான் அதிகம் அவர் புகைப்படம் எடுத்துள்ளார். சும்மா சொல்லக் கூடாது.. அத்தனை அழகாக உள்ளன அந்த புகைப்படங்கள். அவர் எடுத்த புகைப்படங்கள் சில மேகசின்களிலும் கூட இடம் பெற்றுள்ளது. முகத்துக்கு நேராக ஒன்று பேசி முதுகில் குத்தும் மனிதர்களுக்கு விலங்குகள் எவ்வளவோ மேல்.. எதிர்த்தாலும் அன்பு காட்டினாலும் நேருக்கு நேர் அதை வெளிப்படையாக காட்டுபவை விலங்குகள் மட்டும்தான். இதனால்தானோ என்னவோ தனது அன்பையும், பாசத்தையும், நேசத்தையும் விலங்குகள் பக்கம் திருப்பி விட்டுள்ளாரோ சதா என்று நினைக்கத் தோன்றுகிறது.
புகைப்படக் கலை மட்டுமல்லாமல் பேஷன், மேக்கப், சமையல் கலை, டான்ஸ் என பல துறைகளிலும் அசத்திக் கொண்டிருக்கிறார் சதா.. அவரது யூடியூப் சானலைப் பார்த்தாலே தெரியும் அவரது வாழ்க்கை எத்தனை அழகாக போய்க் கொண்டிருக்கிறது என்று. முன்பொருமுறை திருமணம் குறித்து அவர் அளித்த பேட்டியில், திருமணம் சந்தோஷமானது அல்ல என்று கூறியிருந்தார் சதா என்பது நினைவிருக்கலாம். வெறும் நடிகையாக மட்டுமல்லாமல், ஒரு பர்பஸுடன் நடை போடும் சதாவின் லைப்ஸ்டைல் நிச்சயம் ஒரு அருமையான முன்னுதாரணம்தான்.. பெண்களுக்கு மட்டுமல்ல, அனைவருக்குமே.
சட்டம் ஒழுங்கை சீர்குலைத்த விடியா திமுக அரசு... எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம்!
அம்பானி வீட்டு மின்சார கட்டணம் எவ்வளவு தெரியுமா? கேட்ட நீங்களே ஆசந்து போவீங்க!
யாருடன் கூட்டணி?...டிடிவி தினகரன் நாளை கட்சியினருடன் ஆலோசனை
யூடியூப் பார்த்து வெண்காரம் வாங்கி சாப்பிட்ட இளம்பெண் உயிரிழப்பு
காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தை புறக்கணித்த 30 உறுப்பினர்கள்
பாஜகவின் புதிய தேசிய தலைவராக நிதின் நபின் பதவியேற்பு
பல ஆயிரம் கோடி லஞ்சம்... இது தான் திமுக அமைச்சர் கே.என். நேருவின் சாதனைகள்: அண்ணாமலை
கவர்னரின் மைக் ஆஃப் செய்யப்படவில்லை...சபாநாயகர் அப்பாவு விளக்கம்
கள்ளக்குறிச்சி ஆற்றுத் திருவிழாவில் சிலிண்டர் வெடிப்பு - பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு
{{comments.comment}}