திருவனந்தபுரம்: பென்சி ப்ரொடக்ஷனில் மலையாளத்தில் வெளிவர இருக்கும் அதிரடியான திரில்லர் திரைப்படத்திற்காக மிகவும் பயங்கரமான சண்டைக் காட்சியில் நடிக்கும்போது, நடிகை சாக்ஷி அகர்வாலுக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டு விட்டதாம்.
நடிகை சாக்ஷி அகர்வால் முதலில் மாடலிங் துறையில் புகுந்து கலக்கிநார். 2018 ஆம் ஆண்டு ஓராயிரம் கினாக்களால் என்ற மலையாள திரைப்படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானவர். அதே ஆண்டில் ரஜினிகா்த் நடித்த காலா திரைப்படத்தில் நடித்து தமிழ் திரையுலகிலும் அறிமுகமானவர். இதனைத் தொடர்ந்து தமிழ், மலையாளம், கன்னடம், போன்ற மொழிகளில் பல்வேறு படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார்.
இதனைத் தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 3 கலந்து கொண்டு சிறந்த கண்டஸ்டண்டனாக திகழ்ந்தார். இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் தமிழ் மற்றும் மலையாளத்தில் இவருக்கு நிறைய பட வாய்ப்புகள் வர தொடங்கியது. இதில் யோகி பாபு உடன் சாரா படத்தில் லீட் ரோலில் நடிப்பது உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்தார்.
சோசியல் மீடியாவில் எப்பவும் ஆக்டிவாக இருக்கும் சாக்ஷி அகர்வால் அவ்வப்போது ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குளிர வைப்பவர். சமீபத்தில் நடிகை சாக்ஷி அகர்வால் புதிய மலையாளத் திரைப்படத்தில் கமிட்டாகி உள்ளதாக சமூக வலைதளத்தில் அப்டேட் கிடைத்தது. அப்படத்தில் லுங்கி மற்றும் ஜாக்கெட் அணிந்து நடிப்பது போன்ற புகைப்படம் சோசியல் மீடியாவில் வலம் வந்தது. இது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
இதனை தொடர்ந்து தற்போது மீண்டும் மலையாள படத்தில் கமிட்டாகி உள்ளார் நடிகை சாக்ஷி அகர்வால். இவர் நடிப்பில் பென்சி புரொடக்ஷன்ஸின் தயாரிப்பில் மலையாளத்தில் வெளியாகவிருக்கும் அதிரடியான த்ரில்லர் திரைப்படத்திற்காக மிகவும் பயங்கரமான சண்டைக் காட்சியில் நடித்துள்ளார். இப்படத்தில் சண்டைக் காட்சியை, சண்டைப் பயிற்சி இயக்குனர் ஃபீனிக்ஸ் பிரபு இயக்குகிறார்.
ஸ்டண்ட் சீனில் நடித்து கொண்டிருக்கும் போது நடிகை சாக்ஷி அகர்வாலுக்கு திடீரென காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனே படக்குழுவினர் பதட்டம் அடைந்தனர். பின்னர் அடிபட்ட காலில் சிகிச்சை அளித்தனர். அதனைத் தொடர்ந்து சிறிது நேரம் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இருந்தாலும் கூட காலில் ஏற்பட்ட காயத்துடன் சண்டைக் காட்சியில் நாளை முழு வீச்சில் நடித்து முடிக்க இருக்கிறாராம் நடிகை சாக்ஷி அகர்வால்.
நேபாளத்தில் வெடித்த பெரும் கலவரம்.. பின்வாங்கிய பிரதமர்.. நீங்கிய சமூக வலைதள தடை!
புஷ்பா 3 நிச்சயம் உண்டு.. துபாயில் வைத்து ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன சுகுமார்!
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. தொடங்கியது வாக்குப் பதிவு.. முதல் ஓட்டைப் போட்ட பிரதமர் மோடி
கடலும் கடலின் ஒரு துளியும்!
இளையராஜா போட்ட வழக்கு.. குட் பேட் அக்லி-யை ஓடிடி தளத்திலிருந்து நீக்குமா நெட்பிளிக்ஸ்?
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 09, 2025... நல்ல காலம் பிறக்குது
ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
{{comments.comment}}