நடிகை சமந்தா ரகசிய திருமணம்...இணையத்தில் தீயாய் பரவும் தகவல்

Dec 01, 2025,01:50 PM IST

கோவை : நடிகை சமந்தா மற்றும் இயக்குநர் ராஜ் நிடிமோர், கோயம்புத்தூரில் உள்ள ஈஷா யோகா மையத்தில் திங்கள்கிழமை அன்று தனிப்பட்ட முறையில் திருமணம் செய்துகொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவல் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.


தென்னிந்தியாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் சமந்தா, சமீப காலமாக பாலிவுட்டிலும் பிரபலமாக இருந்து வருகிறார். இவர் நடிகர் ராக சைதன்யாவை 2015ம் ஆண்டு முதல் காதலித்து வந்தார். 2017ம் ஆண்டு இவர்கள் இருவருக்கும் கோவாவில் மிக பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது.  இந்நிலையில் 2021ம் நாக சைதன்யாவை பிரிவதாக அறிவித்தார் சமந்தா. அதற்கு பிறகு 2022ல் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். அதற்கு பிறகு சினிமா, யோகா என படுபிஸியாக இருந்து வந்தார் சமந்தா. கிளாமர் ரோல்களிலும் அதிகம் நடித்து வந்தார்.




இந்நிலையில் நடிகை சமந்தா, இயக்குநர் ராஜ் நிடிமோரை இன்று காலை ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக சொல்லப்படுகிறது. சுமார் 20 முதல் 30 பேர் மட்டுமே கலந்துகொண்ட இந்த திருமண நிகழ்வு, ஈஷா யோகா மையத்தின் லிங்க பைரவி கோவிலில் நடைபெற்றதாக கூறப்படுகிறது. திருமணத்தின் போது சமந்தா சிவப்பு நிற புடவை அணிந்திருந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் இது பற்றி சமந்தா மற்றும் ராஜ் நிடிமோர் தரப்பிலோ, ஈஷா மையம் தரப்பிலோ இந்த தகவல் உறுதி செய்யப்படவில்லை.


'தி ஃபேமிலி மேன்' தொடரின் படப்பிடிப்பின் போது சந்தித்த சமந்தா மற்றும் ராஜ் நிடிமோர், அதற்கு பிறகு நெருங்கி பழகி வந்ததாக சொல்லப்பட்டது. இவர்களின் திருமணம் குறித்த வதந்திகள் நீண்ட காலமாகவே பரவி வந்தன. இருவரும் மும்பையில் பலமுறை ஒன்றாக பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட போட்டோக்கள் வெளி வந்தன. இந்த நிலையில், ராஜ் நிடிமோரின் முன்னாள் மனைவி ஷ்யாமலி, நேற்று இரவு தனது சமூக வலைத்தளத்தில், "தவித்தவர்கள் தவித்ததை தேர்வு செய்வார்கள்" என்று ஒரு மறைமுகமான பதிவை வெளியிட்டார். இது திருமண வதந்திகளுக்கு மேலும் வலுசேர்த்தது. ராஜ் மற்றும் ஷ்யாமலி தங்களது விவாகரத்தை 2022 ஆம் ஆண்டு அறிவித்தனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

டெல்டா மாவட்டங்களை உலுக்கிய டிட்வா புயல். கனமழையால் விவசாய நிலங்கள் கடும் பாதிப்பு

news

நடிகை சமந்தா ரகசிய திருமணம்...இணையத்தில் தீயாய் பரவும் தகவல்

news

ஆல் பாஸ்.. ஒரு ஃபீல் குட் மூவி.. பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட விஜய் சேதுபதி, சசிக்குமார்

news

பிரண்டை துவையல்.. டேஸ்ட்டானது.. உடம்புக்கு ரொம்ப பூஸ்ட்டானதும் கூட!

news

சுயநலவாதி...துரோகி...கோபியில் செங்கோட்டையனை சரமாரியாக விமர்சித்த இபிஎஸ்

news

குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கியது...எதிர்கட்சிகளுக்கு பிரதமர் வேண்டுகோள்

news

தேரே இஷ்க் மெய்ன் ரூ. 50 கோடிக்கு மேல் வசூல்.. புதிய சாதனை படைத்த நடிகர் தனுஷ்!

news

பொத்துக்கிட்டு ஊத்துதுங்க மழை.. காலையிலிருந்து சென்னையிலும், புறநகர்களிலும்!

news

டிட்வா புயலுக்குப் போட்டியாக விறுவிறுன்னு ஏறி வரும்.. தங்கம் விலை.. அம்மாடியோவ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்