வெளியில் வராதீங்க.. தெரு நிறைய வெள்ளம்.. போட்டோ போட்டு கோரிக்கை வைத்த சாக்ஷி அகர்வால்!

Dec 04, 2023,05:42 PM IST

- மஞ்சுளா தேவி


சென்னை: வங்க கடலில் உருவான புயல் காரணமாக சென்னை மாநகரமே கடல் போல் காட்சி அளிக்கிறது. நடிகை சாக்ஷி அகர்வால் தான் குடியிருக்கும் பகுதி முழுவதும் மழைநீர் சூழ்ந்துள்ள புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு தயவு செய்து அனைவரும் கவனமாக இருங்கள் என்று கோரிக்கை வைத்துள்ளார்.


சென்னையில் நேற்று இரவு முதல் தற்போது வரை கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னை மற்றும் புறநகரில் அனைத்து பகுதிகளிலும் மழைநீர் வெள்ளம் போல் சூழ்ந்துள்ளது. இன்று இரவு வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


இந்நிலையில் நடிகை சாக்ஷி அகர்வால், அவர் குடியிருக்கும் பகுதியில் மழைநீர் சூழ்ந்துள்ள படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, மக்களே பாதுகாப்புடனும், கவனமுடனும், இருங்கள் ..வீட்டை விட்டு வெளியே வராதீர்கள்.. செல்போனில் சார்ஜை சேமித்து வைத்துக் கொள்ளுங்கள்.. அப்போதுதான் அவசர நேரங்களில் தொடர்பு கொள்ள முடியும்.. எனவும் பதிவிட்டு உள்ளார்.




நடிகை சாக்ஷி நடிப்பதற்கு முன்பு மாடலிங் துறையில் பணியாற்றியவர். இவர் பிக் பாஸ் சீசன் 3யில் கலந்து கொண்டு பிரபலமானார். அவ்வப்போது தனது புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு எப்போதுமே ஆக்டிவாக இருப்பவர்.


தமிழில் மட்டுமல்லாது  கன்னடம், தெலுங்கு, மலையாளம், போன்ற  மொழிகளிலும் நடித்து வருபவர். இவர் நடிகர் ரஜினியுடன் காலா படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றார். அண்மையில் வெளியான பிரபு தேவாவின் பகிரா படத்தின் நடித்த நடிகை சாக்ஷி அகர்வால் , தற்போது ஆறு படங்களில் கமிட் ஆகி பிஸியாக நடித்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு சாரா என்ற படத்தில் ஒப்பந்தமாகி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருதாகவும், நடிகர் யோகி பாபு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியானது.


மிச்சாங் புயல் மற்றும் மழை வெள்ளத்தால் சாதாரண மக்கள் முதல் சாக்ஷி அகர்வால் போன்ற பிரபலங்கள் வரை பலரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். அனைவரும் இந்த சோதனைக் காலத்தை நல்லபடியாக கடந்து வருவோம்.

சமீபத்திய செய்திகள்

news

அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!

news

கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!

news

23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்

news

அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!

news

விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!

news

தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்