காணாமல் போன.. ஷாலு ஷம்முவின் ஐபோன்.. "டன்சோ"வில் திரும்பி வந்தது!

Apr 24, 2023,09:26 AM IST
சென்னை: நடிகை ஷாலு ஷம்முவின் ஐபோன் சமீபத்தில் திருட்டு போயிருந்த நிலையில், தற்போது அதை யாரோ ஒருவர் டன்சோவில் போட்டு ஷாலுவுக்கே அனுப்பி வைத்துள்ளார். அவருடைய நெருங்கிய நண்பர் ஒருவர்தான் இதைச் செய்திருக்க வேண்டும் என்று போலீஸார் சந்தேகிக்கிறார்கள்.

வருத்தப்படாத வாலிபர் சங்கம், மிஸ்டர் லோக்கல், தெகிடி உள்ளிட்ட சில படங்களில் நடித்திருப்பவர் ஷாலு ஷம்மு. சமூக வலைதளங்களில் பிசியாக இருப்பவர். இன்ப்ளூயன்சராகவும் இருப்பவர். சமீபத்தில் தனது ஐபோன் திருட்டுப் போய்விட்டதாக ஷாலு ஷம்மு போலீஸில் புகார் கொடுத்தார். தனக்கு வேண்டிய யாரோதான் இதைத் திருடியிருக்க வேண்டும் என்றும் ஷாலு ஷம்மு சந்தேகம் தெரிவித்திருந்தார்.



ஷாலு ஷம்மு கொடுத்த இந்தப் புகார் பரபரப்பை ஏற்படுத்தியது. காணாமல் போன போன் குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் திடீர் திருப்பமாக அவரது காணாமல் போன ஐபோன் திரும்பக் கிடைத்துள்ளது. எப்படி தெரியுமா.. டன்சோவில் போட்டு அதை அவருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

போன் திருட்டுப் போயிருந்தால் எப்படி திரும்ப வரும்.. எனவே, ஷாலு ஷம்முவுக்கு மிக மிக வேண்டப்பட்ட ஒரு நபர்தான் இந்தப் போனை எடுத்திருக்க வேண்டும். அதில் "ஏதாவது இருக்கிறதா" என்பதை அவர் ஆராய்ந்து பார்த்திருக்கலாம். தற்போது போலீஸார் தீவிரமாக தேடுவதைப் பார்த்துப் பயந்து போய், டன்சோவில் போட்டுத் திரும்ப அனுப்பியிருக்க வேண்டும் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

போனை டன்சோவில் போட்டு அனுப்பியது யார் என்று தெரியவில்லை. தற்போது அதுகுறித்து விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து ஷாலு ஷம்மு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிடுகையில், அனைவருக்கும் ரமதான் வாழ்த்துகள். இந்த நன்னாளில்,  எனது போன் திரும்பக் கிடைத்து விட்டது என்ற செய்தியைத் தெரிவிக்க விரும்புகிறேன். டன்சோ பார்சல் ஒன்று எனக்கு வந்தது. திறந்து பார்த்தபோது பேரீச்சம்பழ டப்பாவில் எனது போன் வைக்கப்பட்டிருந்தது. ஆரம்பத்திலேயே நான் சந்தேகப்பட்டது போல, யாரோ ஒரு நண்பர்தான் போனைத் திருடியிருக்கிறார். எட்டு வருடப் பழக்கம் வீணாகி விட்டது என்று வருத்தத்துடன் கூறியுள்ளார் ஷாலு ஷம்மு.

ரூ. 2 லட்சம் மதிப்புள்ள இந்த ஐ போனை கடந்த ஜனவரி மாதம் வாங்கியுள்ளார் ஷாலு ஷம்மு. ஏப்ரல் 9ம் தேதி ஒரு ஈஸ்டர் பார்ட்டிக்காக போயுள்ளார். பின்னர் ராத்திரிக்கு மேல் சூளைமேட்டில் உள்ள தனது நண்பர் ஒருவர் வீட்டுக்குப் போயுள்ளார். அடுத்த நாள் காலை எழுந்து பார்த்தபோதுதான் போனைக் காணவில்லை.  இதையடுத்து பட்டினப்பாக்கம் போலீஸில் அவர் புகார் கொடுத்தார். தனது நண்பர்கள் சிலருடைய பெயர்களை அதில் குறிப்பிட்டிருந்தார். அத்தனை பேரிடமும் போலீஸார் விசாரணை நடத்தியிருந்தனர்.  இந்த நிலையில் போன் தானாகவே திரும்பி வந்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

சாத்தான்குளம் தந்தை-மகன் லாக்கப் மரண வழக்கு: குற்றவாளிகள் 9 பேருக்கும் மரண தண்டனை

news

தமிழக சட்டசபைத் தேர்தல் 2026 : வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது.. நாளை மனுக்கள் பரிசீலனை

news

இது GenZ காலம்.. திருமணங்களுக்கு முற்றுப்புள்ளியா?

news

ஐபிஎல் டி20 கிரிக்கெட் 2026 : இன்று கோல்கத்தா- பஞ்சாப் அணிகள் மோதல்

news

Mayiladuthurai Kitchen: மைக்ரோவேவ் இல்லாமல் ரவா கேக்கா?.. ஆமாங்க ஆமா!

news

கோவில் மணி.. Temple bell.. அடிப்பதால் என்னெல்லாம் சிறப்பு இருக்கு தெரியுமா?

news

சொல்லாமலே புரியும் அன்னை வீடு… சொல்லியும் புரியாத புகுந்த வீடு!

news

Monday Motivation: புதையுண்டு காத்திருந்தேன்.. பல்லூழிக்காலமாய்.. காலம் உயர்த்தும்!

news

இயற்கை ஒரு மாபெரும் ஆசிரியர்... The greatest lessons I have learnt is

அதிகம் பார்க்கும் செய்திகள்