- மஞ்சுளா தேவி
சென்னை: ஊர்வசியின் நடிப்பு தனி ரகமானது.. சிரித்துக் கொண்டே சிலிர்க்க வைக்கும் நடிப்பை கொட்டிக் கொடுப்பவர். மற்ற நடிகைகள் எல்லாம் வித்தியாசமாக நடித்தால், இவரது நடிப்பே வித்தியாசம்தான். அப்படித்தான் அப்பத்தாவில் அசத்தியிருந்தார் ஊர்வசி. அந்த அப்பத்தா கலர்ஸ் டிவியில் வருகிற 29ம் தேதி வெளியாகவுள்ளது.
நடிகை ஊர்வசி தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். முதன் முதலாக தமிழில் பாக்கியராஜ் இயக்கத்தில் முந்தானை முடிச்சு படத்தில் அறிமுகமானார். இப்படம் 100 நாட்கள் ஓடி மக்கள் மனதில் நல்ல வரவேற்பு பெற்றது. இதன்மூலம் தமிழில் பிரபலமானார் ஊர்வசி. இப்போது கேரக்டர் ரோல்களில் நடித்து வரும் ஊர்வசி, அதிலும் அதகளம் செய்யத் தவறுவதில்லை.
தற்போது ஊர்வசியின் 700 வது படமான அப்பத்தா படத்தை இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கியுள்ளார். இப்படம் கடந்த ஜூலை 29ஆம் தேதி ஜியோ சினிமாஸ் ஓடிடியில் ரிலீஸ் செய்தது. இப்படம் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்று ஊர்வசியின் நடிப்பு பலரையும் கவர்ந்தது. இப்படத்தில் ஊர்வசி மற்றும் அமித் பார்கவ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ஒரு சிறிய கிராமத்தில் ஊறுகாய் தயாரிக்கும் வயது முதிர்ந்த பெண்ணாக ஊர்வசியின் கதாபாத்திரம் அமைக்கப்பட்டுள்ளது. ஊர்வசி கிராமத்தில் வாழ்பவர். இவருடைய மகன் சென்னையில் வாழ்கிறார். சென்னையில் வாழும் தனது மகன் அழைத்ததற்காக சென்னைக்குச் செல்கின்றார். சென்னைக்கு வந்த பிறகு ஊர்வசி தனது மகன் பாசத்திற்காக அழைக்கவில்லை நாயை பாதுகாப்பதற்காக தான் தன்னை அழைத்துள்ளார் என்பதை பற்றி அறிகிறார். பின்னர் அந்த நாயிடம் பழகுவதற்காக ஊர்வசி செய்யும் செயல்களில் நகைச்சுவை கலந்த எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றார்.
இப்படித்தான் முன்பு மஞ்சப் பை என்று ஒரு படம் வந்தது. அதில் ராஜ்கிரண் வித்தியாசமான கேரக்டரில் கலக்கியிருப்பார். கிட்டத்தட்ட ஊர்வசியின் இந்த அப்பத்தாவும் அதே போலத்தான்.. ஆனால் உணர்வுகளில் வித்தியாசப்படுத்தியுள்ளனர். இந்த திரைப்படம் அம்மா மகன் பாசத்தை வித்தியாசமான முறையில் வெளிப்படுத்தி உள்ளது.
இப்படத்தை அனைவரும் கண்டு கழிப்பதற்காக வரும் 26ஆம் தேதி ஞாயிறு மதியம் 2மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது. மக்கள் அனைவரும் ஊர்வசியின் எதார்த்த நடிப்பில் வெளியான அப்பத்தா திரைப்படத்தை பார்க்க காணத்தவறாதீர்கள்..!!
நான் பிடிவாதக்காரன் கிடையாது...பதவி மீது ஆசை எதுவும் இல்லை: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
மோடியால் முடியாததை நான் சாதித்ததால் எடப்பாடி பழனிச்சாமிக்கு வயிற்றெரிச்சல்: முதல்வர் முக ஸ்டாலின்
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி.. ஒரு புகாரும் வரவில்லை.. தேர்தல் ஆணையம்
தமிழ் வளர்ச்சியில் பெண் கவிஞர்களின் பங்கு!
ஹலோ மக்களே.. தீபாவளிக்கு சொந்த ஊர் போறீங்களா?.. இதை தெரிஞ்சுக்க மறந்துடாதீங்க!
திருவண்ணாமலைக்கு திடீரென போன லோகேஷ் கனகராஜ்.. கூலி வெற்றிக்காக பிரார்த்தனை!
32வது பிறந்த நாளை கொண்டாடும் ஹன்சிகா மோத்வானி.. போராட்டங்களே வாழ்க்கை!
புதிய வருமான வரி மசோதா 2025.. திங்கள்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கலாகிறது
டிரம்ப் போட்ட 50% வரியால் பாதிப்பு.. இந்திய ஜவுளி ஏற்றுமதித் துறைக்கு ரூ 87,000 கோடி இழப்பு!
{{comments.comment}}