இந்தியாவின் ஆதித்யா எல் 1 விண்கலம்.. செப்டம்பர் 2ல் விண்ணில் செலுத்தப்படுகிறது

Aug 28, 2023,04:09 PM IST
ஸ்ரீஹரிகோட்டா: இந்தியாவின் சூரிய ஆய்வு விண்கலமான ஆதித்யா எல் 1 செபடம்பர் 2ம் தேதி விண்ணில் செலுத்தப்படுகிறது.

இந்தியா தனது நிலவுப் பயணத்தை சமீபத்தில்தான் வெற்றிகரமாக முடித்தது. இந்த நிலையில் அடுத்து சூரிய ஆய்வு பயணத்தை கையில் எடுக்கவுள்ளது. இஸ்ரோ  ஆதித்யா எல் 1 என்ற சூரிய ஆய்வு விண்கலத்தை உருவாக்கியுள்ளது. இந்த விண்கலமானது செப்டம்பர் 2ம் தேதி ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளத்திலிருந்து விண்ணில் செலுத்தப்படவுள்ளது.



இந்த ஏவுகலம் செலுத்தப்படும் நிகழ்வைக் காண பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. பூமியிலிருந்து 10 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் இந்த விண்கலம் நிலை நிறுத்தப்பட்டு சூரியனின் வெளிப்பகுதியை ஆய்வு செய்யும் பணியில் ஈடுபடும்.

விண்வெளியில் இருந்து ஒரு விண்கலம் மூலம் செயல்படுத்தப்படவுள்ள முதல் இந்திய விண்வெளித் திட்டம் இதுதான். சூரிய - பூமி குடும்பத்தில் உள்ள லாக்ரேஞ்ச் பாயின்ட் எனும் இடத்தில் ஆதித்யா விண்கலமானது நிலைநிறுத்தப்பட்டு அங்கிருந்தபடி சூரியனை அது ஆய்வு செய்யும். இந்த இடத்திலிருந்து சூரியனைப் பார்க்கும்போது எந்தவிதமான இடையூறும் ஏற்படாது. சூரிய கிரகணம் சமயத்திலும் கூட எந்தவிதமான தடையும் இல்லாமல்ஆய்வுசெய்யமுடியும்.

இந்த விண்கலத்தில் 7 விதமான பேலோடுகள் இணைக்கப்பட்டுள்ளன. இதில் நான்கு சாதனங்கள், சூரியனை நேரடியாக ஆய்வு செய்யும். மற்ற 3ம் லாக்ரேஞ்ச் பாயின்ட் பகுதியை ஆய்வு செய்யும்.

சமீபத்திய செய்திகள்

news

மேகதாது அணை விவகாரம்: ஆகஸ்ட் 3ம் தேதி கர்நாடக முதல்வருடன் பேச பெங்களூர் செல்கிறார் முதல்வர் விஜய்

news

சோனம் வாங்சுக்கின் 26 நாள் உண்ணாவிரதத்தை மத்திய அரசு முடிவுக்குக் கொண்டு வந்தது எப்படி?

news

'ஜனநாயகன்' படம் பார்த்தால் சுறுசுறுப்பு வரும்: சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தகவல்

news

ஆடி வெள்ளிக்கிழமையன்று.. அம்மனுக்கு மஞ்சள் காப்பு.. அம்மன் வழிபாடு சிறப்புகள்!

news

எம்.எஸ். தோனியின் சாதனையை முறியடித்த ஸ்ரேயஸ் ஐயர்.. டி20 போட்டிகளில் புதிய உலக சாதனை

news

சிங்காரத்தேனே தென்மதுர மானே !

news

நாங்கள் பிறந்தது யார் செய்த குற்றம்?

news

பாறையும் செடியும்!

news

கொடுப்பதற்கென்றே பிறப்பெடுத்தவள் நீ!

அதிகம் பார்க்கும் செய்திகள்